காஞ்சி சங்கர மடம்காஞ்சி சங்கர மடம் (Kanchipuram Sankara Mutt) காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஓர் சுமார்த்த பிரிவைச் சேர்ந்த இந்து சமய துறவியர் இருப்பிடமாகும். இது காஞ்சி காமகோடி பீடம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆதி சங்கரர் இங்கு சமாதியடைந்ததாகவும் இந்த மடத்தை நிறுவியதாகவும் கூறப்படுகிறது.[சான்று தேவை] இந்த மடத்தின் தலைவர்கள் சிருங்கேரி சாரதா மடம், துவாரகை மடம், கோவர்தன மடம், ஜோஷி மடம் ஆகிய நான்கு சங்கர மடத் தலைவர்களைப் போலவே, "சங்கராச்சாரியர்" என்ற பட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். காஞ்சி மடம் கும்பகோணத்தில் இருந்த 19-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் புகழ்பெறத் துவங்கியது. இதனைச் சிருங்கேரி சங்கர மடத்தின் கிளையாகக் கருதுகின்றனர்.[1][2][3] ஆதி சங்கரர் எழுதிய மடாம்நாய சேது என்ற புத்தகத்தில் அவர் உருவாக்கியதாகக் குறிப்பிடப்படும் நான்கே மடங்களின் பட்டியலில் காஞ்சி மடம் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை[4] என்பதால், காஞ்சிமடம் ஒரு சங்கர மடமே அல்ல என்றும், சிருங்கேரி மடத்தின் கும்பகோணம் கிளை என்றும் வரலாற்று தரவுகளும் நான்கு சங்கர மடங்களும் தெரிவிக்கின்றன. 1839-இல்[5][6][7] தான் அன்றைய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் மற்றும் தஞ்சாவூர் மராட்டிய சரபோசி, தஞ்சாவூர் சிவாஜி ஆதரவிலும் தங்களைப் போட்டி சங்கரச்சாரியாராக அறிவித்துக் கொள்ள துவங்கினர் என்பது மடத்தின் ஆவணங்கள் மூலம் தெரிகிறது.[1][8][9][10] இன்று தென்னிந்தியாவில் உள்ள முதன்மையான இந்து சமய அமைப்புகளில் ஒன்றாகக் காஞ்சி சங்கர மடம் விளங்குகிறது. சர்ச்சைகள்1987-இல் செயந்திர சரசுவதி தனது சாதுர்மாசிய சன்னியாச விரதத்தை[தெளிவுபடுத்துக] உடைத்து காவி, தண்டம், கமண்டலம் ஆகியவற்றை உதறி தலைக்காவிரிக்குத் தப்பி ஓடியபோது, சந்திரசேகர சரசுவதியால் அவருக்கு மாற்று வாரிசாக விசயேந்திர சரசுவதியை நியமித்தார். பின்னர், செயந்திரர் கண்டுபிடிக்கப்பட்டவுடன் மடத்தில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். நவம்பர் 2004-இல், இந்த மடத்தின் தலைவர்களாக இருந்த செயந்திர சரசுவதி, விசயேந்திர சரசுவதி இருவரும் சங்கர்ராமன் கொலை வழக்கில் கைதானதை அடுத்து இம்மடத்திற்கு இழுக்கு ஏற்பட்டது. பின்னர் இருவரும் வழக்கிலிருந்து நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். விசயேந்திர சரசுவதியும் அவர் தம்பி ரகுவும் நடிகை சுவர்ணமால்யா கணேஷுடன் தொடர்பிலிருந்தது காவல்துறை விசாரனையில் தெரியவந்தது.[11] காஞ்சி சங்கரமடத் தலைவர் செயந்திர சரசுவதி தன்னிடம் பாலுறவு நோக்கில் முறைகேடாக நடந்துகொண்டதாக எழுத்தாளர் அனுராதா ரமணன் ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினார். சங்கரமடத்தின் சார்பில் ஒரு பக்தி பத்திரிகை துவங்கப்போவதாகக் கூறி, தான் அழைக்கப்பட்டதாகவும் அப்போது தனிமையில் தன்னிடம் ஆபாசமாகப் பேசிய ஜெயேந்திர சரஸ்வதி முறைகேடாக நடக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.[12] இதனால் அதிரச்சியடைந்த தான் உடனே அங்கிருந்து வெளியேறியதாகவும், பின்னர் இதை மையமாகக் கொண்டு ஒரு வார இதழில் தொடர் ஒன்று எழுதியதாகவும் கூறினார்.[13] விசயேந்திரர், சிருங்கேரி மடத்துக்குக் கட்டுப்பட்ட இராமேசுவரம் இராமேசுவரம் இராமநாத சுவாமி கோயில் கருவறைக்குள் எச். இராசா, சு. குருமூர்த்தி துணையுடன் சிவாகமங்களை மீறி அடாவடியாக நுழைந்து பூசை செய்தார்.[14] இதனால் கருவறைக்குள் வைக்கப்பட்டிருந்த ஆதி சங்கரர் கொடுத்திருந்த ஸ்படிக லிங்கம் இவரால் உடைக்கப்பட்டதாகவும் களவாடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன[15]. வரலாறுகாஞ்சி சங்கரமடத்தின் தொன்மை, வரலாறு குறித்து சர்ச்சைகள் எழுந்தன. இந்த மடத்தின் அலுவல்முறை வரலாற்றின்படி ஆதி சங்கரர் இந்த மடத்தை நிறுவியதாகவும் அவரைத் தொடர்ந்து 69-ஆவது மடத்தலைவராக பொறுப்பாற்றுவதாகவும் கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து உள்ளதாகவும் நிறுவப்படுகிறது.[16] மடத்தின் வேறுசில பரப்புரைகளிலும் ஆதி சங்கரர் காஞ்சிக்கு வந்திருந்து சர்வக்ஞா பீடம் என்று மடம் நிறுவியதாகவும் இங்கு இறந்ததாகவும் அறியப்படுகிறது. பிற மூலங்கள் சங்கரரின் இறப்பு இமாலயத்தில் கேதார்நாத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன.[17] வேறு சிலர் இந்த மடம் அண்மையில் 18ஆம் நூற்றாண்டில் கும்பகோணத்தில் சிருங்கேரி மடத்தின் கிளையாக நிறுவப்பட்டு தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கியது என்கின்றனர்.[18][19] கும்பகோணத்தில் இருந்த மடத்தலைவர்கள் காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நிர்வாகத்தை கைக்கொள்ளவே தங்கள் மடத்தை 1842க்கும் 1863க்கும் இடையில் காஞ்சிக்கு இடம் பெயர்த்தனர்; இதுவே காஞ்சி மடத்தின் துவக்க காலம் என்றும் கூறுகின்றனர்.[20] காஞ்சி மடத்தின் கூற்றின்படி 18-ஆம் நூற்றாண்டில் இடம் பெயர்ந்ததற்கான காரணம் அய்தர் அலியின் படையெடுப்பு ஆகும். மேலும், ஆதி சங்கரர் வந்தமைக்கும் மடம் 2500 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டிருப்பதற்கும் காஞ்சியைச் சுற்றியுள்ள கோவில்களில் கல்வெட்டுகள் தொல்லியல் சான்றுகளாக உள்ளதாக கூறுகின்றனர். மடத்தின் கூற்றுப்படி காஞ்சியிலுள்ள சன்னிதி கோவில் தெருக்கட்டிடம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையதாக நிறுவப்பட்டாலும் இதனை மறுப்போரும் உள்ளனர். சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் பீடாதிபதியாக பல்லாண்டுகள் இருந்தார்.[21] இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia