காட்டேரி அம்மன்
![]() காட்டேரி அம்மன் (Katteri Amman), காட்டேரி என்றும் சுருக்கமாக அழைக்கப்படுவது இந்து தெய்வம் ஆகும். இவரது வழிபாடு திராவிட நாட்டுப்புறச் சமயத்திலிருந்து உருவாகியது. காட்டேரி அம்மன் வழிபாடு சைவ சமயத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், இவர் பெரும்பாலும் பார்வதியின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறார். காட்டேரி அம்மன் ஒரு குறிப்பிட்ட நகரத்தின் காவல் தெய்வமாகச் செயல்படுகிறார். [1] காட்டேரி அம்மனின் பக்தர்கள்/ஆதரவாளர்களில் சிலர், கலியுகத்தில் நோய்களை அழிக்கும் பொறுப்பைக் கொண்ட மகாதேவியின் ஒரு வடிவமாகவும் கருதுகின்றனர்.[2] இந்த தெய்வம் எப்போதும் காவல் தெய்வத்துடன் முனீசுவரனுடன் சித்தரிக்கப்படுகிறது.[3] புராணக்கதைதமிழ் நாட்டுப்புறக் கதைகளின்படி, சிவன் ஒருமுறை தனது மனைவி பார்வதி, நள்ளிரவில் படுக்கையை விட்டு வெளியேறி, சூரிய உதயத்திற்கு முன்புதான் திரும்புவதைக் கண்டார். இது குறித்து அவர் பார்வதியிடம் விசாரித்தபோது, பார்வதி இரவு முழுவதும் தன் பக்கத்திலேயே இருக்கவில்லை என்று தெரிவித்தார். இது மீண்டும் ஒருமுறை நடப்பதைக் கண்ட சிவன், கைலாசத்திலிருந்து காட்டிற்கு அவளைப் பின்தொடர்ந்து சென்றார். பார்வதி, காளியின் பயங்கரமான வடிவத்தை எடுத்து, பிணங்களைத் தோண்டி, அவற்றை விழுங்கும் நோக்கத்துடன் செயல்படுவதைக் கண்டார். இதனைத் தடுக்கத் தீர்மானித்து, பார்வதி செல்லும் காட்டுப் பாதையில் குழி ஒன்றைத் தோண்டினார். காளி அந்தக் குழிக்குள் விழுந்து சிவனைக் கண்டதும், தன் செயல்களுக்காக வருந்தினார். மேலும் இந்த நோயுற்ற துரத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதாகச் சிவனிடம் உறுதியளித்தாள். மேலும், தன் பயங்கரமான வடிவத்தை அந்தக் குழிக்குள் விட்டுவிட்டு, கடமை உணர்வுள்ள மனைவியாகச் சிவனிடம் திரும்பி வருவேன் என்றும் கூறினார்.[4] எஞ்சியிருக்கும் சக்தி, நோய்களை அழித்து, தன்னைப் பின்பற்றுபவர்களைப் பாதுகாக்கும் ஒரு கருணையுள்ளத் தெய்வமான கட்டேரி அம்மானின் வடிவமாக மாறும் எனத் தெரிவித்தார். இருப்பினும், சில சமூகங்களின் நாட்டுப்புறக் கதைகளின்படி, தெய்வம் சில சமயங்களில் தீய அம்சங்களுடனும் அடையாளம் காணப்படுகிறது. உதாரணமாக, தமிழ் நாட்டுப்புறக் கதைகளின்படி, காட்டேரி அம்மானின் தோற்றம் சிவனால் அவள் மீது சுமத்தப்பட்ட சாபத்திலிருந்து தொடங்குகிறது. இதன் விளைவாக அவர், காடுகளுக்குள் சுற்றித் திரிந்து, கர்ப்பிணிப் பெண்கள் தன்னை வணங்காவிட்டால் அவர்களை வேட்டையாடுகிறார்.இந்தக் காரணத்திற்காகவே, இரத்தம் மற்றும் ஆன்மீக உடைமை சம்பந்தப்பட்ட சடங்குகளுடன் தொடர்புடைய, வன்முறையாளராகவும் சூனியக்காரியாகவும் காட்டேரி சித்தரிக்கப்படுகிறார்.[5] காட்டேரி விரும்பினால் குழந்தைகளைப் பாதுகாக்கும் தெய்வமாகவும் சித்தரிக்கப்படுகிறார். உருவப்படவியல்காட்டேரி பெரும்பாலும் பல வடிவங்களில் சித்தரிக்கப்படுகிறார். அடர் நீலம் அல்லது கருப்பு நிறத்தில் குறிப்பிடப்படுகிறார். காட்டேரி அருவாள், கிண்ணம், திரிசூலம் அல்லது தடியை ஏந்தியபடி காணப்படுவார்.[6] வழிபாடுதென்னிந்தியாவிலும் இலங்கையிலும் கிராமங்களில் போர்வீரர்கள் சமூகத்தினரால் காட்டேரி அம்மன் வழிபடப்படுகிறார். திரினிடாட், கயானா, ஜமைக்கா, மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பிற இடங்களில் உள்ள தமிழ் தெலுங்கு புலம்பெயர்ந்தோர் காட்டேரி போற்றப்படுகிறார். காட்டேரியின் காணிக்கைகளில் வேப்ப இலைகள், எலுமிச்சை பழங்கள், சிவப்பு பூக்கள் அடங்கும்.கருவாடு கறி சாதம் , கோழி காட்டேரிக்குப் படையல் இவருடைய பக்தர்களிடையே பொதுவானது. காட்டேரி ஒரு குலத் தெய்வமாகக் கருதப்படுகிறார்.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia