காதலாகி
காதலாகி (kadhalagi) 2010 ஆம் ஆண்டு கே. ஆர். விஸ்வா இயக்கத்தில், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன், பிரகாஷ் ராஜ் மற்றும் சிருஷ்டி டங்கே நடிப்பில், பாடல்கள் ஏ. ஆர். ரெய்கானா மற்றும் பின்னணி தமன் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3][4][5] கதைச்சுருக்கம்தொடர்வண்டியில் பயணம் செய்யும் இளைஞர்களான நான்கு நண்பர்களிடம் அனந்தகிருஷ்ணன் (பிரகாஷ் ராஜ்) இக்காலத்து இளைஞர்கள் அக்கறையும் பொறுப்பும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக இருப்பதாகக் கூறுகிறார். அவருடைய கூற்றை பொய் என்று நிரூபிக்க நான்கு நண்பர்களும் முடிவெடுக்கின்றனர். நந்தினி வேலு நாச்சியார் (சிருஷ்டி டங்கே), ரேஸ்மி குமார் (அம்ரிதா சபிரியா), மகேஷ் முத்துசாமி (நதிம் கான்), முகமது அஸ்லாம் (ரோஷன் நவாஸ்) மற்றும் ஏஞ்சலினா கிறிஸ்டி (நட்சத்திரா) கட்புலத் தொடர்பாடல் பட்டப்படிப்பு படிக்கும் நண்பர்கள். மாயவித்தை நிபுணரான தியாகுவும் (கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன்) நந்தினியும் காதலர்கள். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இதை அறியும் நந்தினியின் உறவினரான ராஜா ராஜசேகரன் (விஜய் கோபால்) நந்தினியை ஆணவக்கொலை செய்கிறான். ஆனால் அந்தக் கொலையை மறைத்து சட்டத்திடமிருந்து தப்பிக்கிறான் ராஜா. இதனால் மற்ற ஐவரும் சேர்ந்து நந்தினியின் கொலைக்கான நியாயம் வேண்டி போராட்டம் நடத்துகின்றனர். அவர்களின் போராட்டத்தை காவல்துறை அடக்குமுறையைக் கையாண்டு ஒடுக்குகிறது. தொலைக்காட்சியில் இக்கொலை பற்றிய உண்மைகளை வெளிக்கொணர ஒரு நிகழ்ச்சியைத் துவக்குகின்றனர். ஆனால் இறந்துவிட்டதாக நினைத்த நந்தினி உயிரோடு வருகிறாள். ஏன் நந்தினி இறந்துபோனதாக நாடகம் நடத்தினார்கள். அதனால் அவர்கள் சாதித்தது என்ன? என்பது மீதிக்கதை. நடிகர்கள்
இசைபடத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர் ஏ. ஆர். ரெய்கானா. பின்னணி இசையமைத்தவர் தமன். பாடலாசிரியர் வைரமுத்து.[6][7][8][9]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia