கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியன்கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியன் (Krishnakumar Balasubramanian) என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் நாடக நடிகர் ஆவார். இவர் தி லிட்டில் தியேட்டர் (இந்தியா) நாடகக்குழுவின் நடிப்பு இயக்குநர் ஆவார்.[1][2][3] இவர் தி லிட்டில் தியேட்டருக்காக (இந்தியா) பல மேடை நாடகங்களுக்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அதாவது 2011 இல் கிறிஸ்துமஸ் பாண்டோமைம்கள் 'ஆலிஸ் இன் ஐலேண்ட்' மற்றும் 2012 இல் 'தி ஃப்ரீ மஸ்கடியர்ஸ்', 2010 இல் 2 மியூசிகல்ஸ் 'அடிடா' மற்றும் 'கப்சா - ஃபுல்லி லோடட்' இளம் பார்வையாளர்களுக்கான சர்வதேச நாடக விழாவுக்காக 2012 'லிட்டில் ஃபெஸ்டிவல்' போன்றவற்றுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் இவர் பல ஆண்டு அனுபவமுள்ள கடின உழைப்பு கொண்ட நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் 2018 அக்டோபரில் ரித்தேஷ் பத்ரா இயக்கிய ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவான ‘சாந்தி சூத்ரா’ விழாவில் கலாசேத்ரா அறக்கட்டளையின் நாட்டிய நாடக தயாரிப்பின் நாடக இயக்குநராகப் பணியாற்றினார். 2020 நவம்பரில் வெளியான சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படத்தில் இவர் கேப்டன் சைதன்யா ராவ் 'சே'வாக நடித்தார். தொழில்இவர் நடிகர் பிரகாஷ் ராஜுடன் காதலாகி என்ற முழு நீள திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இது 2010 மே மாதத்தில் வெளியானது. இவர் 2012 திசம்பரில் தன் 26 வயதில் ரன்பீர் கபூர் மற்றும் விராட் கோலியுடன் 'இந்தியா டுடே ' யின் 37வது ஆண்டு இதழில், நாளைய 37 இந்தியர்களில் ஒருவராக இடம்பெற்றார் [4] இவர் உலக பொருளாதார மன்றத்தின் (2012) முன்முயற்சியான உலக பொருளாதார மன்றத்தின் உறுப்பினராக இருந்தார்.[5][6] கே. கே. என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியன், சூரரைப் போற்று படத்தில் கேப்டன் சே (அ) சைதன்யா ராவாக நடித்தார், தெலுங்கு பதிப்பிலும் அதே பாத்திரத்தை ஏற்றிருந்தார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.[7] திரைப்படவியல்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia