காந்தபஞ்சி சட்டமன்றத் தொகுதி
காந்தபஞ்சி சட்டமன்றத் தொகுதி (Kantabanji Assembly constituency) என்பது ஒடிசா மாநிலம் பாலங்கிர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2] இந்தத் தொகுதியில் காந்தபஞ்சி, துரேகேலா தொகுதி, பங்கோமுண்டா மற்றும் முரிபகால் ஆகிய பகுதிகள் அடங்கும்.[3][4] 2019ஆம் ஆண்டில், காந்தபஞ்சி சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி 128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5] இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த சந்தோசு சிங் சலுஜா வெற்றி பெற்றார். இந்த தொகுதியிலிருந்து பிஜு ஜனதா தளத்தின் ஹாஜி முகமது அயூப் கானா, 2009 ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இதற்கு முன்பு 2004ல் சுயேச்சை வேட்பாளராக ஹாஜி முகமது அயூப் கான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1990ல் ஜனதா தளத்தின் பிரசன்னா பாலும், 1985ல் சுயேச்சை வேட்பாளரான சைதன்யா பிரதானும், 1980 மற்றும் 1977-இல் காங்கிரசு கட்சியினைச் சார்ந்த பிரசன்ன பாலும் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளனர்.[6] காந்தபஞ்சியின் போலாங்கிர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[7] 2024 தேர்தல்2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலட்சுமன் பாக், நவீன் பட்நாயக் மற்றும் சந்தோசு சிங் சலுஜா ஆகியோரை தோற்கடித்து முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[8] தேர்தல் முடிவுகள்1961இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, இன்றுவரை 16 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. காந்தபஞ்சி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்: [10][11] 2024ஒடிசா சட்டமன்றத் தேர்தலின் 2ஆவது கட்டத்திலும், இந்திய பொதுத் தேர்தலின் 5ஆவது கட்டத்திலும் 2024 மே 20 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.[12] வார்ப்புரு:Election box gain with party link no swing
20192019 தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் சந்தோசு சிங் சலுஜா பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் இலட்மன் பாக்-ஐ 128 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 20142014 தேர்தலில், பிஜு ஜனதா தளம் வேட்பாளர் அயூப் கான் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் சந்தோசு சிங் சலுஜாவை 3,868 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[14]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia