காந்தி தேசிய நினைவு அறக்கட்டளை![]() மகாத்மா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளை (Mahatma Gandhi National Memorial Trust) (Hindi: गाँधी स्मारक निधि), மகாத்மா காந்தியின் நினைவை இந்தியா முழுவதும் போற்றுவதற்காக 1949-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையை இந்திய அரசின் நிர்வாகத்தில் உள்ளது.[1][2] காந்தி தேசிய நினைவு அறக்கட்டளைக்கான துவக்க நிதியான நூற்றி முப்பது அமெரிக்க டாலர் மதிப்பில் பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது.[3]" இந்த அறக்கட்டளைக்கு பொதுமக்கள் வழங்கிய நிதிக்கு மகாத்மா காந்தியின் உருவப்படம் கொண்ட இரசீதுகள் அச்சடிக்கப்பட்டது. ஆச்சார்ய கிருபளானி கையொப்பமிட்ட இரசீகள் வழங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் நிதியின் மூலம் காந்தி பவன், தேசிய காந்தி அருங்காட்சியகம், காந்தி சமிதி, காந்தி அருங்காட்சியகம், மதுரை போன்ற நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை பராமரிக்கவும், புதிதாக காந்தி நினைவிடங்கள் கட்டவும் நிதியுதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் காந்திய சிந்தனைகளை மக்களிடம் பரப்பவும் இந்த அறக்கட்டளை நிதியுதவி செய்யப்படுகிறது. [4][5] [6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia