காமதா இராச்சியம்காமதா இராச்சியம் (Kamata kingdom) (pron: ˈkʌmətɑ), காமரூப பால வம்சத்தினரின் காமரூபப் பாலப் பேரரசின் ( 350–1140) வீழ்ச்சிக்குப் பின்னர் கிபி 13-ஆம் நூற்றாண்டில் எழுச்சியுற்ற இராச்சியமாகும்.[1] காமதா இராச்சியத்தின் இறுதி மன்னரை, தில்லி சுல்தானகத்தின் வங்காளப் பிரதேச ஆளுநர் அலாவுத்தீன் உசைன் ஷா, ஆட்சியிலிருந்து அகற்றினாலும், அவரால் காமரூபப் பேரரசில் தனது ஆட்சியை நிலைநிறுத்த இயலவில்லை. இதனால் 1586-இல் காமதாப் பேரரசை அகோம் வம்சத்தினர் கைப்பற்றி ஆண்டனர். சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் காமதா இராச்சியத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கூச் பெகர் தலைநகராகக் கொண்டு 1586-இல் கூச் பெகர் இராச்சியம் நிறுவப்பட்டது. கென் வம்சத்தினர் கூச் பெகர் தலைநகராகக் கொண்டு கூச் பெகர் இராச்சியத்தை, இந்திய விடுதலை வரை ஆண்டனர். பின்னர் 1948-இல் தங்கள் இராச்சியத்தை இந்தியாவுடன் இணைத்தனர்.[2] இதனையும் காண்கஅடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia