காம்பில்யம்
காம்பில்யம் (Kampil) இந்திய மாநிலமான உத்திரப் பிரதேசத்தின் பரூக்காபாத் மாவட்டத்தில் அமைந்த நகரப் பஞ்சாயத்து ஆகும். மகாபாரத காலத்தில் தெற்கு பாஞ்சால நாட்டின் தலைநகராக விளங்கிய காம்பில்யம் நகரம், ஃபரூக்காபாத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பண்டைய வரலாறுகாம்பில்யம் நகரம் பண்டைய பாஞ்சால நாட்டின் தலைநகராக விளங்கியது. பாஞ்சால நாட்டின் மேற்கில் குரு நாடு, சூரசேனம், மத்சய நாடுகளும், கிழக்கில் நைமிசாரண்ய காடுகளும் இருந்தனர். மகாபாரத காலத்தில் அருச்சுனன், துருபதனை வெற்றி கொண்ட பின்பு பாஞ்சால நாட்டை, வடக்கு பாஞ்சாலம், தெற்கு பாஞ்சாலம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. காம்பில்யத்தை தலைநகராகக் கொண்ட தெற்கு பாஞ்சாலத்தை துருபதனும்; வடக்கு பாஞ்சாலத்தை துரோணரின் அசுவத்தாமனும் ஆண்டனர். சமண சமயத்தின் 13வது தீர்த்தங்கரர் விமல்நாத்தின் பிறப்பிடமாக காம்பில்யம் நகரம் கருதப்படுகிறது. விமல்நாத்திற்கு காம்பில்யம் நகரத்தில் இரண்டு சமணக் கோயில்கள் அமைந்துள்ளது. தற்கால மக்கள் தொகை2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, காம்பில்யம் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 8475 ஆகும். அதில் ஆண்கள் 54% ஆகவும், பெண்கள் 46% ஆகவும் உள்ளனர். கல்வி அறிவு 47% ஆக உள்ளது. ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 21% ஆகவுள்ளனர்.[1] புகழ் பெற்றவர்கள்இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia