மத்சய நாடு![]() மத்சய நாடு அல்லது விராட நாடு (Matsya) நாடு, கி மு ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவின் இருந்த 16 மகாஜனபத நாடுகளில் ஒன்றாக விளங்கியது என அங்குத்தர நிக்காய எனும் பௌத்த நூல் மூலம் அறியப்படுகிறது. [1][2] மத்ஸம் எனும் சமஸ்கிருத மொழிச் சொல்லிற்கு மீன் எனப் பொருள்படும். பிந்தைய வேத கால நாடான மச்சய நாடு, தற்கால இராஜஸ்தானின் வடகிழக்கு பகுதிகளைக் கொண்டது. இதன் மன்னர் விராடன் ஆவார். குருச்சேத்திரப் போரில் விராடனும், அவரது மகன் உத்தரனும் கலந்து கொண்டனர். பாலி மொழி இலக்கியங்களில் மச்சயர்கள் சூரசேன நாட்டினருடன் தொடர்புடையவர்கள் என அறிய முடிகிறது. மேற்கு மச்சய நாட்டின் பகுதி, சம்பல் ஆற்று மலைப்பகுதிகளைப் பகுதிகளைக் கொண்டது. மகாபாரதத்தில்மகாபாரத இதிகாசத்தில் (V.74.16) பாண்டவர்கள், திரௌபதியுடன் 12 ஆண்டு காடுறை வாழ்வு முடித்து, ஒரு ஆண்டு தலைமறைவு வாழ்வை, மத்சய நாட்டுத் தலைநகரான விராட அரண்மனையில் கழித்தனர் என அறிய முடிகிறது. மச்சய நாட்டின் உபப்பிலாவிய வனம் சிறப்பாக கருதப்படுகிறது. மகாபாரத்தின் உத்தியோகப் பர்வத்தில், உபப்பிலாவிய வனத்தில் பாண்டவர்கள், கிருஷ்ணர், துருபதன், மத்சய நாட்டு மன்னன் விராடன் ஆகியோர் குருச்சேத்திரப் போர் குறித்து ஆலோசித்தனர். இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia