காரென் தேசிய விடுதலைப் படைகள்
![]() காரென் தேசிய விடுதலைப் படைகள் (Karen National Liberation Army (சுருக்கமாக: KNLA), மியான்மர் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கில் செயல்படும் காரென் தேசிய ஒன்றியத்தின் (Karen National Union) (KNU),ஆயுதக் குழுவாகும்.மியான்மர் நாட்டின் தாய்லாந்து எல்லையை ஒட்டிய காயா மாநிலம், காயின் மாநிலம், தாநின்தாரி பிரதேசம், பகோ மாநிலம் மற்றும் மொன் மாநிலங்களில் வாழும் காரென் மக்களுக்கான மாநில தன்னாட்சி உரிமைக்கு போராடுவதே இதன் நோக்கமாகும். இப்படைகள் 1949ஆம் ஆண்டிலிருந்தே மியான்மர் அரசுக்கு எதிராக போராடி வருகிறது. 2021ஆம் ஆண்டில் இப்படையில் 15,000 வீரர்கள் உள்ளனர்[4] 2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட மியான்மர் உள்நாட்டுப் போரில் இப்படையானது தனது கூட்டாளிகளான காரென்னி படைகள், காரென்னி தேசிய மக்கள் விடுதலை முன்னணி மற்றும் காரென்னி தேசியவாதிகள் பாதுகாப்பு படைகளுடன் இணைந்து மியான்மர் இராணுவத்திற்கு எதிராக போரிட்டு, மியான்மர் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைப்புறப் பகுதிகளை கைப்பற்றி தன்னாட்சி நிர்வாகம் நடத்துகிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia