காரை சுந்தரம்பிள்ளைமுனைவர் காரை செ.சுந்தரம்பிள்ளை (மே 20, 1938 - செப்டம்பர் 21, 2005) ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். வாழ்க்கைக் குறிப்புயாழ்ப்பாண மாவட்டம், காரைநகரின் களபூமி என்ற ஊரில் செல்லர், தங்கம் ஆகியோருக்கு பிறந்த சுந்தரம்பிள்ளை ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு அக்குவெனெஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். தமிழ் மொழிப் பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்வான் க.கி.நடரஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார், ஆ.சபாரத்தினம் ஆகியோர் விளங்கினர். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில மொழி, சமஸ்கிருத மொழி, பாளி மொழி, சிங்கள மொழி ஆகியவற்றிலும் புலமை பெற்றார். தொழில்1960 ஆம் ஆண்டில் இருந்து கொழும்பு, சென் யோசேப் கல்லூரி, கேகாலை, ஹெம்மாதகம முஸ்லிம் மகா வித்தியாலயம், கே/மாவனல்ல சாகிரா கல்லூரி, யாழ்ப்பாணம், தேவரையாளி இந்துக் கல்லூரி, ஒஸ்மானியாக் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், காரைநகர் இந்துக் கல்லூரியில் அதிபராகவும், பின்னர், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், தலைவாக்கெலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார். இவற்றைவிட திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (உளவியல்), யாழ் பல்கலைக்கழகம் (நாடகமும் அரங்கியலும்), யாழ்ப்பாணக் கல்லூரி (இந்து நாகரிகம்) ஆகியவற்றில் இடைவரவு விரிவுரையாளராகவும் பணியாற்றினார். மொத்தம் 37 ஆண்டுகள் ஆசிரிய சேவையில் பணியாற்றினார். இவற்றுள் 15 ஆண்டுகள் கல்வி நிருவாக சேவையும் அடங்கும். எழுத்துத் துறையில்புகைவண்டி என்ற இவரது முதலாவது கவிதை அழ. வள்ளியப்பாவில் பூஞ்சோலை என்ற இதழில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து 'பூஞ்சோலை'யிலும் 'கண்ணன்' எனும் சிறுவர் சஞ்சிகையிலும் பல கவிதைகள் வெளிவரத்தொடங்கின. அதனைத் தொடர்ந்து இலங்கைப் பத்திரிகைகளிலும் கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவரலாயின. எழுதிவெளியிட்ட நூல்கள்
பெற்ற பரிசுகள்
யாழ்ப்பாண மாநகரசபை மன்றக்கீதத்தை எழுதியதற்காக இவருக்குக் கேடயமும், சான்றிதழும், பொற்கிழியும் வழங்கப்பட்டன. பொற்கிழியை எரிந்த யாழ் நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார். இது தவிர யாழ் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரிக் கீதமும் இவரால் ஆக்கப்பட்டதாகும். மேடையேற்றிய முக்கிய நாடகங்கள்
உசாத்துணை நூல்கள்
|
Portal di Ensiklopedia Dunia