கார்த்திகேசு சிவத்தம்பி
கார்த்திகேசு சிவத்தம்பி (மே 10, 1932 - சூலை 6, 2011) ஒரு முக்கிய தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் ஆவார்.[1][2][3] கல்வியும் கல்விப்பணியும்யாழ்ப்பாணம் கரவெட்டி மேற்கில் பிறந்த சிவத்தம்பி ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு சாகிரா கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் 1956 முதல் 1961 வரை கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராகவும், 1961 முதல் 1965 வரை இலங்கை நாடாளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். இலங்கையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். ஐக்கிய இராச்சியத்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். பல்கலைக்கழகப் பணி1965 முதல் 1970 வரை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 1970 முதல் 1975 வரை விரிவுரையாளராகவும், 1976 முதல் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார். கலைப் பங்களிப்புபல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இலங்கையர்கோன் எழுதிய "விதானையார் வீட்டில்" தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார். ஆக்கங்கள்ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பல்வேறு துறைகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்குப் புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் எனப் பல்வேறு துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். மறைவுபேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தனது 79 வது வயதில் 2011, சூலை 6 புதன்கிழமை இரவு 8 .15 மணிக்கு கொழும்பு, தெகிவளையில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் காலமானார். இவர் பற்றிய படைப்புகள்தமிழக அரசின் திரு.வி.க. விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட ஈழத்தமிழ் அறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை விகசிப்பின் சில ஊற்றுக்களைப் பதிவு செய்யும் வகையில், 'கரவையூற்று' எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கொழும்புக் கிளை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 'கரவையூற்று' நூலின் தொகுப்பு ஆசிரியர் வீ.ஏ.திருஞானசுந்தரம். இவருடைய நூல்கள்
பதிப்பித்த நூல்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia