மானிடவியல்
மானிடவியல் அல்லது மாந்தவியல் என்பது (Anthropology) மனித இனம் பற்றிய ஆய்வறிதல் ஆகும். இது மனித குலத்தைச் சமூக நிலை, பண்பாட்டு நிலை, உயிரியல் நிலை போன்ற வேறுபட்ட நிலைகளில் கடந்த கால மக்களையும், சமகால மக்களையும் (அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களின் மக்களையும்) ஆராயும் பரந்து விரிந்த இலக்குடையதாக உள்ளது.[1][2][3][4] இது இரண்டு வகைகளில் முழுதளாவிய (holistic) தன்மை கொண்டது: இது எல்லாக் காலங்களையும் சேர்ந்த அனைத்து மனிதர்களையும், மனித இனத்தின் அனைத்து அம்சங்களையும் பற்றிக் கருத்தில் கொள்கின்றது. பண்பாடு பற்றிய எண்ணக்கருவும், மனித இயல்பு பண்பாடே எனும் கருத்தும் (notion); அதாவது எங்களுடைய இனம் உலகத்தை குறியீட்டு முறையில் விளங்கிக் கொள்வதற்கும், சமுதாய ரீதியில் குறியீட்டு முறையில் பயிலவும் பயிற்றுவிக்கவும், அக்குறியீடுகளின் அடிப்படையில் உலகத்தையும் எங்களையும் மாற்றிக் கொள்வதற்கும் ஏதுவாக முழுமையான தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளது என்னும் கருத்துமே மானிடவியலின் அடிப்படையாகும். ஐக்கிய அமெரிக்காவில், மானிடவியல் பாரம்பரியமாக நான்கு துறைகளாக வகுக்கப்படுகிறது:
மானிடவியல் எண்ணக்கருக்கள்
மானிடவியல் துறைகளும் துணைத் துறைகளும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia