கார்னிதின்
கார்னிதின் (Carnitine) என்னும் நான்கிணைய அமோனியாச் சேர்மம் லைசின் மற்றும் மெத்தியோனின் அமினோ அமிலங்களிலிருந்து உயிரியல் முறையில் தொகுக்கப்படுகின்றது.[1] கார்னிதின், உயிரணுக்களில் கொழுப்பைச் சிதைத்துப் பெறப்படும் வளர்சிதை மாற்ற (அ) உடல் இயக்க எரிசக்தி உருவாக்கத்திற்கு கொழுப்பு அமிலங்களை உயிரணுக்கணிகத்திலிருந்து மணியிழையத்திற்கு எடுத்துச் செல்லத் தேவைப்படுகிறது. இது, உணவுச் சேர்ப்பாக விற்பனை செய்யப்படுகின்றது. முதன்முதலில், கார்னிதின் புழு உணவில் வளர் காரணியாகக் கண்டறியப்பட்டது. கார்னிதின் உயிர்ச்சத்தாகவும் (விட்டமின் Bt) அழைக்கப்படுகின்றது. கார்னிதின் இரு முப்பரிமாண மாற்றியங்களைக் கொண்டுள்ளது. L-கார்னிதின் உயிரிச் செயற்படு வடிவத்தில் உள்ளது. ஆனால், இதன் ஆடி மாற்றியன், D-கார்னிதின் உயிரிச் செயல்படா வடிவத்தில் உள்ளது.[2] மாந்தர்களின் குடலில் இருக்கும் நுண்ணுயிரிகளின் இயக்கத்தால் உணவாக உட்கொள்ளும் பொருளில் உள்ள எல்-கார்னிதின் குருதிக்குழாயில் கொழுப்பிய படிவு ஏற்படுத்துகின்றது; இது குழாயின் குறுக்களவைக் குறைக்கும் தன்மை ஏற்படுத்தும் டி.எம்.ஏ.ஓ (TMAO எனப்படும் திரைமெத்தில்-அமைன்-என்-ஆக்சைடு, trimethylamine-N-oxide) என்னும் பொருளை உண்டாக்குகின்றது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சிவப்பு இறைச்சியில் அதிகம் இருப்பதால், இதயக்குழாய் சார்ந்த நோய்கள் கூடும் வாய்ப்புள்ளது என்றும் அறியப்படுட்டுள்ளது[3] உயிரித்தொகுப்புவிலங்குகளில், கார்னிதின் முதன்மையாக கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் லைசின் மற்றிம் மெத்தியோனின் அமினோ அமிலங்களிலிருந்து உயிரியல் முறையில் தொகுக்கப்படுகிறது.[4] கார்னிதின் தொகுப்பிற்கு விட்டமின் C (அஸ்கார்பிக் அமிலம்) இன்றியமையாதது. மனித வளர்ச்சியின் போதும்[5], கர்ப்பக் காலத்திலும்[6] கார்னிதின் இயற்கையில் தயாரிக்கப்படுவதைவிட அதிகமாக அளவில் தேவைப்படுகிறது. கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் கார்னிதினின் பங்கு![]() உணவு மூலங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia