காளிதாஸ் (1931 திரைப்படம்)
காளிதாஸ் (Kalidas) 1931 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி உள்ளடங்கலாகப் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமாகும்[1]. இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா தயாரித்த அரங்கிலேயே இப்படம் தயாரிக்கப்பட்டது.[2] இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாசால் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. இப்படத்தின் மூலம் முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது[3]. பாத்திரங்கள்
பாடல்கள்![]() இத்திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன[4][5] ராட்டினமாம் காந்தி கை பாணமாம்[6][7], இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை[8] போன்ற தேசபத்திப்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இப்படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியுள்ளார். துணுக்குகள்
![]()
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia