குறவன் குறத்தி ஆட்டம்குறவன் குறத்தி ஆட்டம்[1] என்பது, குறவர் சமூகத்தினைச் சார்ந்த ஆணான குறவனும், பெண்ணான குறத்தியும் இசைத்தபடி ஆடும் ஆட்டம் ஆகும்.[2] இசைப்பதற்கு உடும்புத் தோலால் ஆன கிஞ்சிராவையோ அல்லது டால்டா டப்பாவையோப் பயன்படுத்தித் தட்டிக்கொண்டு ஆடுவர்.[3] வேடம் புனைந்து, இசைக்கருவிகளுடன், பாட்டுப்பாடி ஆடுவதும் குறவன் குறத்தி ஆட்டமாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் இந்த ஆட்டம், மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டுக் காணப்படுகிறது. குறவரில் நரிக்குறவர் என்று அழைக்கப்படும் சமூகமக்கள் இவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். இக்கலைஞர்கள் சென்னை, திருச்சி, கடலூர், திண்டுக்கல், பழனி, சேலம், இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில், அதிகமாகக் காணப்படுகின்றனர். இன்றைய நிலையில் இக்கலை, உயிர்ப்புடன் வாழும் கலையாக இருக்கிறது. இந்த ஆட்டம், கரகாட்டத்தின் துணை ஆட்டமாகக் திகழ்கிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia