கியூரியம் ஆக்சலேட்டு (Curium oxalate) என்பது Cm2(C2O4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். ஆக்சாலிக்கு அமிலத்தின் கியூரியம் உப்பாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.
கியூரியம் ஆக்சலேட்டை சூடாக்கும் போது சிதைவடையும். கியூரியம் ஆக்சலேட்டின் பத்துநீரேற்று 280 °செல்சியசு வெப்பநிலையில் தண்ணீரை இழந்து ஒரு நீரற்ற வடிவத்தை உருவாக்குகிறது. இது 300 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையத் தொடங்கி, கார்பன் மோனாக்சைடை வெளியிடுகிறது. 360 ° செல்சியசு வெப்பநிலையில் இது Cm2(CO3)3 சேர்மத்தை உருவாக்குகிறது. கார்பன் மோனாக்சைடையும் கார்பன் டை ஆக்சைடையும் வெளியிடுகிறது. 550° செல்சியசு வெப்பநிலையில் ஓர் ஆக்சைடை உருவாக்கி காற்றில் பகுதி ஆக்சிசனேற்றத்திற்கு உட்படுகிறது. இதன் விளைவாக வரும் கியூரியம்(III) ஆக்சைடு +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் கியூரியத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், சில நூல்கள் கியூரியம் ஆக்சலேட்டு இதன் சொந்த கதிரியக்கப் பகுப்பு காரணமாக கார்பனேட்டு இனங்களை உருவாக்க முடியும் என்றும், இந்த சிதைவு அறை வெப்பநிலையில் ஏற்படலாம் என்றும் குறிப்பிடுகின்றன. கூடுதலாக, கியூரியம் ஆக்சலேட்டு 500° செல்சியசு வெப்பநிலையில் கருப்பு கியூரியம் டை ஆக்சைடை உருவாக்குகிறது.[2]
இயற்பியல் பண்புகள்
கியூரியம் ஆக்சலேட்டு பிரகாசமான பச்சை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. தண்ணீரில் குறைந்த அளவில் கரைகிறது.[2]
பயன்கள்
கியூரியம்(III) ஐதராக்சைடு (Cm(OH)3) வழியாக கியூரியம்(IV) ஆக்சைடு (CmO2) தயாரிக்க கியூரியம் ஆக்சலேட்டு வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.[3][4]
மேற்கோள்கள்
↑Lumetta, Gregg J.; Thompson, Major C.; Penneman, Robert A.; Eller, P. Gary (2006). "Curium". The Chemistry of the Actinide and Transactinide Elements (in ஆங்கிலம்). Springer Netherlands. pp. 1397–1443. doi:10.1007/1-4020-3598-5_9. ISBN978-1-4020-3598-2. Retrieved 29 March 2025.