கியூரியம்(III) அயோடைடு (Curium(III) iodide) CmI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல்சேர்மமாகும். கியூரியம் மற்றும் அயோடின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3] கியூரியத்தின் அனைத்து ஓரிடத்தான்களும் செயற்கையாக மட்டுமே தயாரிக்கப்படுவதால், இச்சேர்மம் இயற்கையில் தோன்றுவதில்லை.
தயாரிப்பு
தனிமநிலை கியூரியமும் அயோடினும் சேர்ந்து வினைபுரிந்தால் கியூரியம்(III) அயோடைடு உருவாகிறது.[4]
கியூரியம்(III) அயோடைடு என்பது Cm3+ மற்றும் I− அயனிகளைக் கொண்ட நிறமற்ற அயனிச் சேர்மமாகும். ஓர் அலகு செல்லிற்கு ஆறு அலகுகள் கொண்டு அணிக்கோவை அளவுருக்கள் a = 744 பைக்கோமீட்டர் மற்றும் c = 2040 பைக்கோமீட்டர் உடன் R3 என்ற இடக்குழுவில் (எண். 148) அறுகோண படிக அமைப்புடன் வெள்ளை நிற படிகங்களாக உருவாகிறது. இதன் படிக அமைப்பு பிசுமத்(III) அயோடைடுடன் ஒத்த சமநிலையில் உள்ளது. [5][7]