கிராண்ட் எலியட்
கிராண்ட் டேவிட் எலியட் (Grant David Elliott, பிறப்பு: 21 மார்ச் 1979, ஜோகானஸ்பேர்க்) நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர். பல்துறை ஆட்டக்காரரான இவர் வலக்கை மட்டையாளரும், வலக்கைப் பந்துவீச்சாளரும் ஆவார். தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலியட் 1996-97 காலப்பகுதியில் தென்னாப்பிரிக்காவில் கௌட்டெங் அணியில் முதல்தரப் போட்டிகளில் விளையாடினார். 2001 ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தார்.[1] 2007 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணியில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றார். 2008 ஆம் ஆண்டில் நியூசிலாந்து தேசிய அணியில் சேர்ந்து முதல் முதலாக இங்கிலாந்து அணிக்கு எதிராக தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[2] அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு-நாள் போட்டியிலும் விளையாடி முதல் ஆட்டத்தில் 3 இலக்குகளைக் கைப்பற்றினார். 2009 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது போட்டியில் ஆத்திரேலியாவுக்கு எதிராக விளையாடி தனது முதலாவது சதத்தைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவர் எந்த ஒரு-நாள் போட்டியிலும் கலந்து கொள்ளாவிட்டாலும், 2015 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டார். பன்னாட்டு சதங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia