கேம்பிரியக் காலம்
கேம்பிரியம் அல்லது கேம்பிரியக் காலம் (Cambrian) என்பது 541± 1.0 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 485.4± 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் 6 காலங்களில் முதலாவது காலமான கேம்பிரியக் காலம் புரோடெரசொனிக் ஊழியின் முடிவிலிருந்து ஓர்டோவிசியக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. கேம்பிரியக் காலம் பனரோசோயிக் பேரூழியினதும் தொடக்கமாகும். இக்காலத்தின் பெயர், இக்காலத்தைச் சேர்ந்த பாறப் படிவுகள் முதலில் ஆய்வுக்குற்படுத்தப்பட்ட இடமான வேல்சின் பண்டையப் பெயரான கேம்பிரியாவிலிருந்து பெறப்பட்டதாகும். கடைக்கலவுரு உயிரினங்களின் தொல்லுயிர் எச்சங்கள் அதிகளவில் கண்டெடுக்ககூடிய பாறைப்படிவுகள் கிடைக்கப்பெற்றுள்ள மிகப் பழையக் காலம் கேம்பிரியக் காலமாகும். இவ்வாறு கடினவுடல் உயிரினங்களின் தொல்லுயிர் எச்சங்கள் கேம்பியக் காலத்தில் திடீரென தோன்றியமை ”கேம்பிரிய வெடிப்பு” எனப்படுகிறது. கேம்பிரியத்துக்கு முந்தைய பழையப் பாறைகளிலிருந்தும், ஓர்டோவிசியக் காலத்தைய இளம் பாறைகளிலிருந்தும் பிரித்து தனியாக அடையாளம் காணப்பட்டிருந்தாலும் 1994 ஆம் ஆண்டே கேம்பிரியம் தனியான ஒரு காலமாக உலகலாவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கேம்பிரியக் காலத்தின் தொடக்கம் '('Trichophycus pedum எனப்படும்) சுவட்டு தொல்லுயிர் எச்சத்தைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia