கிருட்டிணகிரி அருங்காட்சியகம்

கிருட்டிணகிரி அருங்காட்சியகம்
கிருட்டிணகிரி அருங்காட்சியகம்

அரசு அருங்காட்சியகம், கிருட்டிணகிரி தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாநகரின் காந்தி சாலையில் 1993ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இவ்வருங்காட்சியகம், தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த அருங்காட்சியகம் ஒரு காப்பாட்சியரால் நிருவகிக்கப்பெறுகின்றது.

அறிமுகம்

கிருட்டிணகிரி தமிழக மாவட்டங்களில் ஒன்றாகும். 1965-க்கு முன்னர் இம்மாவட்டம் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போதைய சேலம், நாமக்கல்,தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகியவற்றுடன் இருந்தது. கிருட்டிணகிரி மாவட்டத்தைச் சார்ந்த அரிய பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பெற்றுள்ளன.

காட்சிப் பொருட்கள்

இந்த அருங்காட்சியகத்தில், நடுகல் (வீரக்கல்),பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள்,கல்வெட்டுகள், கல் சிலைகள், மரப் படிமங்கள்,உலர் தாவரங்கள், மூலிகைப்பொருட்கள், கூத்துக் கலைப்பொருட்கள்,பனையோலைகள்,அருங்காட்சியக வெளியீடுகள், உலோகப் படிம ஒளிப்படங்கள், கலைப்பொருட்கள், தொல் தமிழர்கள் பயன்படுத்தியப் பொருட்கள், முதுமக்கள் பானைகள், சுடுமண் படிமங்கள், இருளர் பொருட்கள், மாந்தர் உடல் மாதிரிகள், கல் வகைகள், தொல்லுயிரிப் படிமங்கள், கனிமங்கள் ஆகியன உள்ளன.

நடுகற்கள் (வீரக்கல்)

கல்வெட்டுகள்

மரப்படிமங்கள்

கல் சிலைகள்

சுடுமண் படிம, மண்பாண்டங்கள்

முதுமக்கள் தாழி

ஓவியக் காட்சிக்கூடம்

பாடம் செய்யப்பெற்ற விலங்குககள்

பாடம் செய்யப்பெற்ற விலங்கு, விலங்குப் பொருட்கள்

பாடம் செய்யப்பெற்ற பறவைகள்

இசைக்கருவிகள்

மரக்கட்டைகள்

இதர கலைப்பொருட்கள்

சமையலறைப் பொருட்கள்

போர்க்கருவிகள்

ஆதாரம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya