கிருத்தவ மருத்துவக் கல்லூரி, லூதியானா
கிருத்தவ மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை (The Christian Medical College and Hospital) லூதியானா, இந்தியா ஆசியாவின் முதல் பெண்களுக்கான மருத்துவக் கல்லூரியாகும். இதனை 1894இல் டேம் எடித் மேரி பிரவுன் என்பார் நிறுவினார். 1881இல் மருத்துவச் சேவைகளை சகோதரிகள், மார்த்தா ரோசும் கேயும் வழங்கி வந்தனர். இருவரும் இசுக்கொட்லாந்திலிருந்து வந்திருந்த சமயப் பரப்புரையாளர்களும் கல்வியாளர்களும் ஆவர். இவர்களது முன்னோடியானப் பணியே மருத்துவப் பயிற்சிக்கும் உடல்நல கவனிப்பு சேவைகளுக்கும் வித்திட்டது; லூதியானாவின் கிறுத்தவ மருத்துவக் கல்லூரி இந்தப் பணிகளிலிருந்தே தொடங்கியது. 1893இல் இச்சேவைகளில் மருத்துவர் எடித் மேரி பிரவுன் ஈடுபடுத்திக் கொண்டார். 1894இல் இவரும் இவரது கூட்டாளிகளுமாக வட இந்தியா கிறித்தவ பெண்கள் மருந்தியல் பள்ளியைத் துவக்கினார். இதன் நோக்கம் இந்தியக் குடிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, மருத்துவக் கல்வியும் உடல்நலப் பேணுதல் பயிற்சியும் வழங்குவதாகும். 1894இலிருந்து 1952 வரை படிப்படியாக வளர்ந்து பெண்கள் கிறித்தவமருத்துவக் கல்லூரியாக மாறியிருந்தது. 1952இல் ஆண்களையும் சேர்க்கும் வண்ணம் இதன் பெயர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி என மாற்றப்பட்டது. முறையாக சீர்தரப்படுத்தப்பட்ட மேம்பட்ட இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை மருத்துவப் பட்டப்படிப்பு 1953இல் துவங்கப்பட்டது. இக்கல்லூரி சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்திற்கு இணைக்கப்பட்டது. 1964இல் இது மருத்துவ பட்டமேற்படிப்பு கல்விகளுக்கும் மேம்படுத்தப்பட்டது. சூலை 1999 முதல் இக்கல்லூரி பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நூற்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia