சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (Ministry of Health and Family Welfare) என்பது இந்தியாவின் சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்தும் இந்திய அரசின் அமைச்சகங்களுள் ஒன்றாகும். மேலும் இந்தியாவின் குடும்பக்கட்டுப்பாடு தொடர்பான திட்டங்களும், குடும்பநலத் திட்டங்களும் இவ்வமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. இவ்வமைச்சகத்தில் நான்கு துறைகள் உள்ளன. அவை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ஆயுஷ் துறை, சுகாதார ஆய்வுத்துறை மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை ஆகும். இதன் மூத்த அமைச்சர் சர்பானந்த சோனாவால் மற்றும் இணை அமைச்சர் சத்திய பால் சிங் பாகேல் ஆவார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைமருத்துவம் மற்றும் சுகாதார விசயங்களில் ஆலோசனையும், சுகாதாரப் பணி செயல்பாடுகளும் புரியும் சுகாதாரப்பணி தலைமை இயக்குநரகம்(Dte.GHS) இத்துறையில் இயங்குகிறது. இந்திய மருந்தாய்வுக் குழுவின் மூலம் இந்திய மருந்துகளின் தரத்தை நிர்ணயம் செய்து சுகாதாரத்தைப் பாதுகாக்கிறது.[1] சுகாதாரம்நலம் பேணல் விழிப்புணர்வுப் பிரச்சாரம், எதிர்ப்புசக்தி விழிப்புணர்வுப் பிரச்சாரம், தடுப்பு மருந்து மற்றும் பொதுநலம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஆகிவற்றில் கவனம் செலுத்துகிறது. எய்ட்சு, புற்றுநோய், யானைக்கால் நோய், ஐயோடின் குறைபாடு, தொழு நோய், மனநலம், குருட்டுத் தன்மை, கேள்விக் குறைபாடு, நீரிழிவு நோய், இதயக் குழலிய நோய் மற்றும் காச நோய் போன்றவைகளுக்கு 13 தேசிய சுகாதாரத்திட்டங்களைச் செயல்படுத்துகிறது.
குடும்ப நலம்குடும்பம் வாழ்க்கைத் தரம், மகப்பேறு மருத்துவம், கர்ப்பிணிகள் ஆரோக்கியம், குழந்தை மருத்துவம் ஆகியவற்றில் முக்கியமாக கவனம் செலுத்துகிறது. அரச சார்பற்ற அமைப்புகள், சர்வதேச உதவிக்குழுக்கள், கிராம சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்களுடன் இணைந்து தகவல்களைப் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தி பணியாற்றுகிறது.
ஆயுஷ் துறை (AYUSH)1995ல் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை தொடங்கப்பட்டது. பின்னர் 2003 நவம்பரில் ஆயுர்வேதம், யோகம் மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை (சுருக்கமாக ஆயுஷ் துறை) என்று பெயர்மாற்றப்பட்டது. இந்திய பாரம்பரிய மருத்துவத் துறையில் கல்வி, தரநிர்ணயம், கட்டுப்பாடுகள், மருத்துவப் பொருள் மேம்பாடு, ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை இத்துறை கையாளுகிறது.[2]
ஆய்வு குழுக்கள்:[3]
தேசிய நிறுவனங்கள் (இந்திய மருத்துவத்தில் கல்வி):[4]
வல்லுநர் குழுக்கள்
சுகாதார ஆய்வுத்துறைஇந்திய அரசு (வணிக ஒதுக்கீடு) விதி 1961ன் படி 2007 செப்டம்பரில் இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் துணையுடன் இத்துறை தொடங்கப்பட்டது. நவீன மருத்துவத் தொழில் நுட்பத்தை மக்களுக்கு அளிக்கும் விதத்தில் நோய்நாடல், சிகிச்சைமுறை, நோய் தடுப்புமுறை, கருவிகள் மற்றும் அணுகுமுறைகள் ஆகியவற்றில் புதுமையை ஊக்குவிக்கிறது. இதர அறிவியல் துறையுடன் இணைந்து பொது சுகாதாரப் பணிகளில் ஆய்வும் அணுகுமுறையும் வழங்குகிறது.[5] எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறைதேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு(NACO) இத்துறையின் கீழ் செயல்படுகிறது. இவ்வமைப்பின் மூலம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உரியமுறையில் தரமான சிகிச்சை அளைக்கிறது. மேலும் ஹெச்.ஐ.வி. இல்லா சூழலை உருவாக்க ஆதரவும் முனைப்பும் தந்து எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறது.[6] இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia