கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி
கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி (Krishna Prasad Tenneti) என்பவர் மேனாள் இந்தியக் காவல்பணி அதிகாரியும், இந்திய அரசியல்வாதியும் இந்திய மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் ஆந்திரப் பிரதேச பாபட்லா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1][2] இவர் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் ஆவார். [1][3] கல்விதென்னெட்டி ஆந்திரப் பிரதேசம் வாரங்கல்லில் உள்ள தேசியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் இளங்கலை பொறியியல் பட்டமும், அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் முதுநிலை மேலாண்மை பட்டயத்தையும் பெற்றுள்ளார்.[4] தொழில்தென்னெட்டி 1986ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தினைச் சேர்ந்த இந்தியக் காவல்பணி சேவை அதிகாரியாகவும், 2014 முதல் தெலங்காணாவில் ஓய்வு பெறும் வரையிலும் பணியாற்றினார். இவர் தற்போது சாம்செட்பூரில் உள்ள தேசியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆளுநர்கள் குழு உறுப்பினராகவும் உள்ளார். [5] மக்களவை உறுப்பினர்தென்னட்டி 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் ஆந்திரப் பிரதேச பாபட்லா மக்களவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia