கிரேசி மோகன்
கிரேசி மோகன் (16 அக்டோபர் 1952 - 10 சூன் 2019)[3] தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார்.[4] அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றினார். முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவதில் பெயர் பெற்றவர். இவரது சகோதரர் மாது பாலாஜி, கிரேசி மோகனின் நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிப்பவர். ஆரம்ப காலம்எஸ். வி. சேகர் அவர்களின் நாடகமான "கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்" என்ற நாடகத்தின் மூலம் 1976இல் அறிமுகமானார் மோகன். அந்த நாடகம் பெறும் வரவேற்பைப் பெற்றதால் 'கிரேசி' என்ற அடைமொழியுடன் 'கிரேசி' மோகன் என்று அழைக்கப்பட்டார்.[5][6][2] பணியாற்றிய திரைப்படங்கள்
மறைவுகிரேசி மோகன் மாரடைப்பால் 10 சூன் 2019 அன்று பிற்பகல் 2 மணி அளவில் மருத்துவமனையில் மறைந்தார்.[7] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia