கிறிஸ்டைன் லகார்டே
கிறிஸ்டைன் மேடலீன் ஓடெட் லகார்டே (Christine Madeleine Odette Lagarde, பிறப்பு 1 சனவரி 1956)[1] பிரான்சின் தற்போதைய நிதி அமைச்சரும் பன்னாட்டு நாணய நிதியத்தின் முதல் பெண் தலைவராக சூலை 5, 2011 அன்று பொறுப்பேற்க தெரிவு செய்யப்பட்டுள்ளவருமாவார்[2]. சூன் 2007 அன்று பிரான்சின் நிதி அமைச்சராக குடியரசுத் தலைவர் நிக்கொலா சார்கோசியால் நியமிக்கப்பட்டார். முன்னதாக, டொமினிக் வில்லெபின்னின் அரசில் வேளாண் அமைச்சராகவும் வணிக அமைச்சராகவும் பங்காற்றி யுள்ளார். ஜி8 நாடுகள் ஒன்றில் பொருளாதார விவகார அமைச்சராகப் பணியாற்றிய முதல் பெண் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் முதல் தலைவர் என்ற பெருமையும் கொண்டவர்.[3] ஏகபோகத்திற்கு எதிரான மற்றும் தொழிலாளர் நலன் வழக்கறிஞராக அறியப்பட்ட லகார்டே பன்னாட்டு சட்ட நிறுவனம், பேக்கர் & மெக்கன்சியின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்று வரலாறு படைத்துள்ளார். நவம்பர் 16, 2009 நாளிட்ட த பினான்சியல் டைம்ஸ் இதழ் ஐரோப்பிய வலயத்தில் மிகச்சிறந்த நிதி அமைச்சராக தரவரிசைப்படுத்தி உள்ளது.[4] 2009ஆம் ஆண்டு போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் மிகச் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் லகார்டே 17வதாக குறிப்பிடப்பட்டுள்ளார் .[5] சூன் 28, 2011, பாலியல் குற்றவழக்குத் தொடரப்பட்டுள்ள டொமினிக் ஸ்ட்ராஸ்-கானிற்கு மாற்றாக பன்னாட்டு நாணய நிதியத்தின் அடுத்த மேலாண் இயக்குநராக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். சூலை 5, 2011 முதல் ஐந்தாண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.[3][6][7] ஊடகம்2011 ஆண்டு வெளியான எச்பிஓ நிறுவனத்தின் டூ பிக் டு ஃபெயில் என்ற திரைப்படத்தில் லைலா ராபின்சு என்ற நடிகை லகார்டேயாக சித்தரிக்கப்படுள்ளார். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia