கிறிஸ்டோப் பெக்

கிறிஸ்டோப் பெக்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஜீன் கிறிஸ்டோப் பெக்
பிறப்புநவம்பர் 30, 1972 (1972-11-30) (அகவை 52)[1][2]
மொண்ட்ரியால், கனடா
இசை வடிவங்கள்திரைப்படம், தொலைக்காட்சி
தொழில்(கள்)இசையமைப்பாளர்

ஜீன் கிறிஸ்டோப் பெக் (ஆங்கிலம்: Jean-Christophe Beck) என்பவர் கனடிய நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இசையமைப்பாளர் ஆவார். இவர் தி ஹேங்கொவர் (2009), தி மப்பேட்ஸ் (2011), புரோசன் (2013), புரோசன் II (2019) மற்றும் மார்வெல் திரைப் பிரபஞ்ச மீநாயகன் படங்களான ஆன்ட்-மேன் (2015) மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு பப்பி தி வாம்பயர் ஸ்லேயர் என்ற தொலைக்காட்சித் தொடருக்காக சிறந்த இசை அமைப்பிற்கான பிரைம் டைம் எம்மி விருதை வென்றுள்ளார். டிஸ்னி+ என்ற ஓடிடி தளத்திற்காக வாண்டாவிஷன் என்ற இணையத் தொடருக்கும் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இதுவரைக்கும் ஒரு பிரைம் டைம் எம்மி மற்றும் அன்னி விருது போன்றவற்றை வென்றுள்ளார், மேலும் ஒரு பிரைம் டைம் எம்மி, இரண்டு அன்னி விருதுகள் மற்றும் ஒரு கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

ஜீன் கிறிஸ்டோப் பெக் நவம்பர் 30, 1972 ஆம் ஆண்டில் கனடாவில் மொண்ட்ரியால்வில் பிறந்தார். இவர் தனது ஐந்து வயதில் கின்னரப்பெட்டி பாடங்களை கற்க தொடங்கினார். பெக் கிரசண்ட் பள்ளியில் கின்னரப்பெட்டி, கிளபம், சாக்சபோன் மற்றும் விபுணவி ஆகியவற்றைப் பயின்றார், மேலும் பல மென்மையான 80 காதல் பாடல்களை எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

  1. "Christophe Beck Biography". Retrieved February 14, 2020.
  2. "Christophe Beck - IMDb". Retrieved February 14, 2020.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya