கிழக்கத்திய தகைவிலான்கிழக்கத்திய தகைவிலான் (அறிவியல் பெயர்: Hirundo rustica gutturalis) என்பது தகைவிலானின் துணையினம் ஆகும். இப்பறவைகள் இமயமலையிலும், கிழக்காசியாவிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்தத் துணையினத்தை 1786 இல் ஜியோவானி அன்டோனியோ ஸ்கோபோலி விவரித்தார்.[1] விளக்கம்கிழக்கத்திய தகைவிலான் தோற்றத்திலும் பழக்கவழக்கத்திலும் ரசுடிகா தகைவிலானை ஒத்தது. இது அளவில் சற்று சிறியதாக இருப்பதாலும் தொண்டையில் உள்ள செம்பழுப்பு நிறத்தைச் சுற்றி அமைந்துள்ள கருப்புவளையம் நடுவில் முறிந்திருப்பதாலும் இது ஒரு தனி துணையினமாக வகைப்படுத்தபட்டுள்ளது.[2] பரவலும் வாழிடமும்நடு மற்றும் கிழக்கு இமயமலையில் இனப்பெருக்கம் செய்யும் தகைவிலான்கள் கிழக்கத்திய தகைவிலான் கிளையினத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.[3] இருப்பினும் இந்த துணையினமானது முதன்மையாக யப்பானிலும், கொரியாவிலும் இனப்பெருக்கம் செய்கிறது. கிழக்காசியவில் இனப்பெருக்கம் ஆகும் பறவைகள் குளிர்காலத்தில் வெப்பமண்டல ஆசியா முழுவதும் குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கைக்கும்[4] கிழக்கே இந்தோனேசியா மற்றும் நியூ கினி வரை வலசை போகின்றன. இவை தென்னிந்தியாவுக்கும் வலசை வந்து கூட்டம் கூட்டமாக திரியக் காணலாம். கடற்கரை சார்ந்த பகுதிகளில் எங்கும் காண இயலும். மேற்கோள்கள்கள்
|
Portal di Ensiklopedia Dunia