கிழக்கு ஆசியாவின் வரலாறுகிழக்கு ஆசியாவின் வரலாறு என்பது கிழக்கு ஆசியா என அறியப்படும் ஆசியக் கண்டத்தின் கிழக்கத்திய பிராந்தியத்தில் வாழ்ந்த மக்களின் வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் தற்காலம் வரை உள்ள வரலாறு ஆகும். இப்பகுதி சீனா, ஜப்பான் மற்றும் கொரியாவின் பண்டைய நாகரிகங்கள் தோன்றி வளர்ந்த இடமாகும். வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், ஓமோ இரெக்டசு கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 18 இலட்சம் முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தனர்.[1] பதிவுசெய்யப்பட்ட நாகரிகம் சீனாவில் சுமார் 2000 கி.மு. முதல் தொடங்குகிறது. வரலாற்றுக்கு முந்தைய காலம்ஓமோ இரெக்டசு ("நிமிர்ந்த மனிதன்") கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 18 இலட்சம் முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. பீக்கிங் மனிதன் என அறியப்படும் 40 ஓமோ இரெக்டசு நபர்களின் புதைபடிவங்கள், பெய்ஜிங் அருகே சோகோதியானில் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் சுமார் 400,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களாவர். இந்த இனம் சீனாவில் குறைந்தபட்சம் பல இலட்சம் ஆண்டுகள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.[1] இவர்கள் இந்தோனேசியாவில் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்து இருக்கலாம். இவர்கள் முதன்முதலில் தீ மற்றும் உணவை சமைக்க தெரிந்தவர்களாக இருந்திருக்கலாம்.[2] மேலும் காண்கஉசாத்துணை
மேலும் படிக்க
அறிஞர் பத்திரிகைகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia