கீசெர் மாவட்டம்
கீசெர் மாவட்டம் (Ghizer District), இந்தியாவின் காஷ்மீர் பகுதியின் வடக்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் காக்குச் நகரம் ஆகும். 2019-ஆம் ஆண்டில் இம்மாவட்டத்தின் கிழக்கில் உள்ள பெரும்பகுதிகளைக் கொண்டு குபிஸ்-யாசின் மாவட்டம் நிறுவப்பட்டது.[1] கீசெர் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்ந்ததால் இம்மாவட்டத்திற்கு கீசெர் மாவட்டம் எனப்பெயராயிற்று. இம்மாவட்டத்தில் புனியால், குபிஸ், யாசின், பாந்தர் மற்றும் இஷ்கோமென் சமவெளிகள் உள்ளது. புவியியல்![]() கீசெர் மாவட்டத்தின் வடக்கில் பாகிஸதானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் மேல் சித்ரால் மாவட்டம் மற்றும் ஆப்கானிஸ்தானின் வக்கான் மாவட்டம், கிழக்கில் ஹன்சா மாவட்டம், நாகர் மாவட்டம் மற்றும் கில்ஜித் மாவட்டம், தெற்கில் தாங்கிர் மாவட்டம், தென்மேற்கில் தாரெல் மாவட்டம், மேற்கில் குபிஸ்-யாசின் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. கீசெர் மாவட்டம்-மேல் சித்ரால் மாவட்ட எல்லையில் அமைந்த காரகோரம் மலைத்தொடரில் உள்ள உயரமான கொடுமுடி 6,871 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு கில்ஜித் ஆறு பாய்கிறது. மாவட்ட நிர்வாகம்கீசெர் மாவட்டம் இரண்டு தாலுகாக்கள் கொண்டது. அவைகள்:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia