கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனார் கோயில்

மாவயல் காட்டு ஐயனார் கோயில்
ஆள்கூறுகள்:10°23′52″N 78°36′10″E / 10.39768°N 78.60278°E / 10.39768; 78.60278
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:கீழத்தானியம், பொன்னமராவதி வட்டம்
அஞ்சல் குறியீடு:622002
சட்டமன்றத் தொகுதி:திருமயம்
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
கோயில் தகவல்
மூலவர்:ஐயனார்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடித் திருவிழா

கீழத்தானியம் மாவயல் காட்டு ஐயனார் கோயில் என்பது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், கீழத்தானியம் ஊராட்சியில் அமைந்துள்ள ஐயனார் கோயிலாகும்.

திருவிழா

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆடியில் திருவிழா நடைபெறும்.[1] முதல் நாள் காப்பு கட்டுதலுடன் தொடங்கப்படும் இத்திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறும். மண்டகப்படிதாரர்களின் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகத் தேரோட்டமானது 9ஆம் நாள் நடைபெறும். தேரோட்டத்தின் அன்று ஐயனார் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுவார். மேளதாளம் முழங்க வாண வேடிக்கைகளுடன் பக்தர்கள் வடம் பிடித்துத் தேரை முக்கிய வீதிகளின் வழியாக இழுத்துச் செல்வர். 10ஆம் நாள் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறும்.[2] இவ்விழாவில் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொள்கின்றனர்.[3][4]

ஏறுதழுவல்

இக்கோயிலில் ஆண்டு தோறும் ஏறுதழுவல் போட்டி நடைபெறுகிறது.[5][6]

மேற்கோள்கள்

  1. "கீழத்தானியம் மாவயல் காட்டு ஐயனார் கோயில் தேரோட்டம்". Archived from the original on 2020-05-20. Retrieved மே 19, 2020. {{cite web}}: Invalid |url-status=No (help)
  2. "காரையூர் அருகே ஐயனார் கோவில் தேரோட்டம்". Archived from the original on 2022-08-16. Retrieved ஆகத்து 16, 2022.
  3. "கீழத்தானியம் மாவயல் காட்டு ஐயனார் கோயில் தேரோட்டம்". Archived from the original on 2022-08-14. Retrieved ஆகத்து 14, 2022.
  4. "கீழத்தானியம் மாவயல் காட்டு ஐயனார் கோயில் தேரோட்டம்". Archived from the original on 2022-08-14. Retrieved ஆகத்து 14, 2022.
  5. "மாடுபிடி வீரர்கள்". பெப்ரவரி 2, 2020. Archived from the original on 2022-08-14. Retrieved ஆகத்து 14, 2022.
  6. "25 injured in jallikattu". பெப்ரவரி 2, 2020. Archived from the original on 2022-08-14. Retrieved ஆகத்து 14, 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya