குகுவா புதைபடிவ பூங்கா
குகுவா புதைபடிவப் பூங்கா (Ghughua Fossil Park) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாபுராவுக்கு அருகில் அமைந்துள்ள தேசியப் பூங்கா ஆகும், இப்பூங்காவில் 18 குடும்பத்தினைச் சார்ந்த 31 வகை தாவர புதைபடிவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.[2] மண்டலா மாவட்டத்தின் புள்ளியியல் அதிகாரியும், மாவட்ட தொல்லியல் பிரிவின் கௌரவ செயலாளருமான முனைவர் தர்மேந்திர பிரசாத் அவர்களால் 1970களில் இப்பூங்கா நிறுவப்பட்டது. இது 1983-ல் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[3] இந்த பூங்காவில் ஏராளமான தாவரங்கள், இலைகள், பழங்கள், விதைகள் மற்றும் ஓடு படிமங்கள் காணப்படுகின்றன, இவற்றில் சில 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தயவை.[3] இவற்றில் மிக முக்கியமானவை பனை புதைபடிமங்கள்.[2] குறிப்பிடத்தக்க புதைபடிவங்கள்குகுவாவில் கண்டுபிடிக்கப்பட்ட தைல மரம் புதைபடிமமானது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வகைகளில் மிகப் பழமையான புதைபடிமமாகும். மேலும் இது கோண்டுவானாவிலில் இதன் தோற்றத்தை ஆதரிக்கிறது.[4] கூடுதல் குறிப்பிடத்தக்கக் கண்டுபிடிப்புகளில் ஒரு டைனோசர் முட்டை படிமம் அடங்கும்.[5] போக்குவரத்துகுகுவா புதைபடிவ பூங்கா தேசிய நெடுஞ்சாலை 11க்கு அருகில் அமைந்துள்ளது. இது சாகாபுராவிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும் ஜபல்பூரிலிருந்து 76 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[2] மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia