பனைக்குடும்பம்
ஒருவித்திலைத் தாவரங்களில், (இலத்தீன்:Arecaceae) அரக்கேசி என்ற பனைக்குடும்பம், பெரிய குடும்பமாகும்.[3] இக்குடும்பத்தில் சுமார் 210 பேரினங்களும், 2,500-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இடம் பெற்றுள்ளன.[4] தென்னை,பனைமர வகைகள்,பாக்கு,ஈச்சை வகைகள், பனையெண்ணெய் [கு 1] தரும் எண்ணெய்ப்பனை போன்றவை இக்குடும்பத்தை சேர்ந்தவை. இக்குடும்பத் தாவரங்கள் உலகிலுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன, இக்குடும்பத் தாவரங்களுள் சுமார் 25 பேரினங்களும், 225-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இந்தியாவில் உள்ளன. பாரம்பரியம்பனை மரங்கள் மனிதனின் வரலாற்றில், நெடுங்காலமாகவே, அவர்களது பாரம்பரியத்தின் உட்கூறுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.[5]இம்மரமானது அவர்களின் செல்வத்திற்கும்,உடல்நலத்திற்கும், சமுதாய மதிப்பீட்டிற்குமான இலச்சினையாக உள்ளது. சில நாடுகளின் கொடிகளிலும், படைப்பிரிவின் உயர்நிலைகளிலும் இது அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது.[6] குளிர் மிகுந்த நாடுகளில் கூட, அவர்களின் வேனிற்கால பொது இடங்களில், இந்த இனத்தின் மரமானது, வெது வெதுப்பான சூழ்நிலையையும், இதமான மனப்பாங்கையும் காட்ட, உணவு விடுதிகளின் முன் புறத்திலும், உல்லாச விடுதிகளிலும், சுற்றுலா இடங்களிலும் வளர்க்கப் படுகின்றன.[7] வெப்ப மண்டல நாடுகளில், இவை தோட்டக்கலைத் தாவரமாகவும், பணப்பயிராகவும் வளர்க்கப் படுகின்றன. சில ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார உயர்வும், இக்குடும்ப மரங்களால் உயர்ந்து இருக்கிறது.[8] புறத்தோற்றம்தண்டின் இயல்பு![]() இக்குடும்பத்தில் உள்ள அனைத்தும் மரங்கள் அல்ல. கொடிகளும் உண்டு. பெரும்பாலான தாவர உச்சியில் பெரிய மகுட இலைகளும், அவையுள்ள கிளைத்தல் இல்லாதத் தூண் போன்ற தண்டமைவும் இருக்கின்றன. அத்தண்டின் மேற்பரப்பில், உதிர்ந்த இலைகளின் தழும்புகளும் இருக்கின்றன. அனைத்து மரங்களும், பெரிய மரங்களாவே வளருகின்றன. (எ.கா.) தென்னை. புதர்செடியாக உள்ள இவ்வினத் தாரவரமான, நிபா புரூட்டிக்கன்சு தாவரத்தில் தரைமேல் தண்டு காணப்படுவதில்லை. தரைக் ̧கீழ் தண்டான, ரைசோமிலிருந்து நேரடியாக பல இலைகள் உற்பத்தியாகின்றன. வேரானாது, வேற்றிட சல்லிவேர்த் தொகுப்பாக அமைந்துள்ளது. இதன் தண்டுப் பகுதியானது, தரையின் மேல் காணப்படும் ஃபோனிக்சு அக்காலிசு தாவரத்தின் தண்டு குட்டையாகவும், பருத்தும் காணப்படும். இத் தாவரத் தண்டில் உள்ள கணுக்கள் இடைவெளி மிகவும் குறுகியே காணப்படுகின்றன. பெரும்பான்மையான மரங்கள் தனியே வளர்ந்தாலும், அவை வளரும் சூழ்நிலைக் காரணிகளினால், நெருங்கிய கூட்டமாகவும் வளரும் இயல்பைப் பெற்று இருப்பது ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.[9] குறிப்பிட்ட (swan palm tree) பனைமரத்தண்டில் ஆண்டு வளையங்கள்[கு 2] இருப்பதில்லை. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு என்பதிலும், ஆண்டு வளைய முறை பயனாகிறது.[10] தோன்றுவதில்லை என்பது இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும். இலையின் இயல்புஇவற்றில் இலையடிசெதில்கள் இல்லை. மேலும், இலைக்காம்புகள் நீண்டு உள்ளன. பெரும்பான்மையான இலையடிப்பகுதி (Calamoideae)அகன்றுள்ளது. அங்கைவடிவ கூட்டிலை களும் (எ.கா. பொராசசு பிலாபெல்லிஃபெர்) உண்டு. பொதுவாக நுனியில் கூட்டமாக அமைந்தவை ஆகும். பெரும்பான்மையான தாவரங்களில், இலைச்சுழல் அமைவு இருக்கின்றன. எனினும், கலாமஸ் தாவரத்தில், இலையமவு, மாற்றிலை காணப்படுகிறது. இலை நரம்பமமைவுகள், இரு வகைகளில் காணப்படுகிறது. ஒன்று, சிறகுவடிவ இணைபோக்கு நரம்பமைவு (எ.கா. கோகாஸ் நியூசிஃபெரா) ஆகும். மற்றொன்று, அங்கைவடிவ விரி இணை நரம்பமைவு (எ.கா. பொராசசு பிலாபெல்லிபெர்) ஆகும். நைபா புரூட்கன்சு (Nypa fruticans) என்பதின் இலை பெரியதாகவும், ஊசிபோன்று காணப்படுகிறது. இந்த இனமானது, நைபோயிடியே (Nypoideae) என்ற பேரினத்தின் ஒரே சிற்றனமாகும்.[11] இனப்பெருக்கம்இக்குடும்பத் தாவரங்களின், பூவிதழ்கள் மொத்தம் ஆறு உள்ளன. ஒவ்வொரு அடுக்கிற்கும், மூன்று என, இரு அடுக்கில், இந்த ஆறு பூவிதழ்களும் அமைந்துள்ளன. இப்பூவிதழ்கள் நிலையானவை ஆகும். இதழ் தனித்த இயல்புடையன. தொடுஇதழாகவோ, திருகு இதழாகவோ, தழுவு இதழாகவோ இணைந்துக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஃபோனிக்ஸ் அக்காலிசு (Phoenix acaulis) என்ற குட்டை பேரிச்சை மரத்தின் வெளி அடுக்கிலுள்ள பூ இதழ்கள், தொடு இதழமைவில் இணைந்தே உள்ளன. ஆனால், உள்அடுக்கிலுள்ள இதழ்கள், திருகு இதழாக அமைந்து, தனித்த இயல்பைப் பெற்றிருக்கின்றன. ஒரு சூலக அறையில், ஒரு சூல் வீதம் அச்சு சூல் ஒட்டு முறையில், மூன்று சூலக அறையுள்ளது. மூன்றும் இணைந்தே உள்ளன. இதன் சூற்பை மேல் மட்டத்தில் அமைந்துள்ளது. பெண் மலரில், மலட்டு தன்மையான பூத்தூள்கள் (மகரந்தம்) இருக்கின்றன. ஊடகங்கள்
குறிப்புகள்
மேற்கோள்கள்![]() விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia