குசாமான்
குசாமான் நகரம் (Kuchaman City), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் நாகவுர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிதாக நிறுவப்பட்ட தித்வானா-குசாமான் மாவட்டத்தில்[1] உள்ள நகராட்சி ஆகும். இதனருகில் தித்வானா நகரம் உள்ளது. மார்வார் பிரதேசத்தில் அமைந்த குசாமான் நகரம், நாகவுர் நகரத்திற்கு கிழக்கே 119.2 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜெய்ப்பூருக்கு கிழக்கே 126.4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. வரலாறுகிபி 5 முதல் 8ஆம் நூற்றாண்டு வரை கூரஜர பிரதிகாரப் பேரரசின் (730-1036) தலைநகராக குசாமான் நகரம் இருந்தது. நாகபட்டர் குசாமான் கோட்டையைக் கட்டினார். பின்னர் 16ம் நூற்றாண்டில் சௌகான் வம்சத்தவர்கள் மற்றும் ரத்தோர் இராசபுத்திரர்கள் இந்நகரத்தின் சிற்றரசர்களாக இருந்தனர்.[2] மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 30 வார்டுகளும், 9,643 வீடுகளும் கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை 61,969 ஆகும். அதில் ஆண்கள் 31,986 மற்றும் 29,983 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 937 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 76.53%ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும் 15.89 % மற்றும் 0.17 % ஆக உள்ளனர். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 75.02%, இசுலாமியர் 22.78%, சமணர்கள் 1.96% மற்றும் பிறர் 0.14% ஆக உள்ளனர்.[3]இங்கு இராசத்தானி, பிராச் மொழி, மார்வாரி மொழி, உருது மொழிகள் பேசுகின்றனர். தொடருந்து நிலையம்![]() குசாமான் தொடருந்து நிலையம், ராஜ்கோட், ஜெய்ப்பூர், ரந்தம்பூர், ஜோத்பூர், தில்லி, பார்மர், மதுரா, மவூ, சுல்தான்பூர், பிலாஸ்பூர், பிகானேர், கௌகாத்தி நகரங்களை இணைக்கிறது. [4] படக்காட்சிகள்
இதனையும் காண்கமேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia