குடிதழீஇய இயக்கச் சங்கம்
குடிதழீஇய இயக்கச் சங்கம் (Union for a Popular Movement, French: Union pour un Mouvement Populaire, யூஎம்பி) பிரான்சு நாட்டின் இரு பெரும் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். மைய-வலது கொள்கையுடைய[5] இந்தக் கட்சி 2002ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் ஜாக் சிராக்கின் தலைமையில் பல மைய-வலது கட்சிகளின் சேர்க்கையால் உருவானது. இக்கட்சியின் தற்போதையத் தலைவர் நிக்கொலா சார்கோசி 2007ஆம் ஆண்டில் பிரான்சின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய சட்டப் பேரவையில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள போதும் மேலவையான செனட்டில் எதிர்கட்சியான சோசலிசக் கட்சி (பிரான்சு)|சோசலிசக் கட்சியும் பிற கட்சிகளும் கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளன. இதன் பொதுச்செயலாளராக ஜீன்-பிரான்சுவா கோபே உள்ளார். ஐரோப்பிய மக்கள் கட்சி, பன்னாட்டு மைய மக்களாட்சியினர் மற்றும் பன்னாட்டு மக்களாட்சி சங்கம் போன்ற பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia