குடுமியான்மலை சிகாகிரீசுவரர் கோவில்சிகாகிரீஷ்வரர் கோவில் என்பது இந்தியாவிலுள்ள, தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், குடுமியான்மலையில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். இக்கோவிலின் மூலவர் சிகாநாதர் என அழைப்படுகிறார்.[1] இவருக்கு குடுமிநாதர் என்றொரு பெயரும் உண்டு. மூலவர்: சிகாநாதர், அம்பிகை பெயர்: அகிலாண்டேஸ்வரி மற்றும் இக்கோயிலின் புராண பெயர்:திருநலக்குன்றம் ஆகும். இக்கோயில் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை செல்லும் சாலையில் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இக்கோயில்.காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். நிர்வாகம்இக்கோவில் இந்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. தெய்வங்கள்இக்கோவிலில் சொர்ணாம்பிகை அம்மன், விநாயகர், ஹனுமன், தெட்சிணாமூர்த்தி, பைரவர், பெருமாள் மற்றும் மலையின் உச்சியில் முருகக்கடவுள் போன்ற தெய்வங்கள் உள்ளது. கோயில் பெருமைகள்இக்கோயில் சிவாலயமாக இருந்தாலும் பெருமாளின் தசாவதார சிலைகள் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளது. அதிலும் குதிரையில் அமர்ந்துள்ள வீரனின் சிலை, கல்கி அவதாரம் என்றே கருதப்படுகிறது. ஒரு குதிரையில் இளைஞனும், மற்றொரு குதிரையில் முதியவர் ஒருவரும் உள்ளனர். கிபி பத்தாம் நூற்றாண்டில் இத்தலம் " திருநலக்குன்றம்' என்று அழைக்கப்பட்டது. சனீஸ்வரனால் சோதிக்கப்பட்ட நளன் இத்தலத்தில் வந்து சிகாநாதரை வணங்கி அருள்பெற்றான் என்று கர்ண பரம்பரைக் கதை கூறுகிறது. பொதுவாக சிவாலயங்களில் துவார பாலகர்கள் கண்டிப்பான முகத்தோற்றத்துடன் கிழக்கு நோக்கி வாயில் காப்பார்கள். ஆனால் இக்கோயிலில் தெற்கும், வடக்குமாக நின்ற நிலையில் இரு துவாரபாலகர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் புன்னகை பூத்த நிலையிலும், மற்றொருவர் சற்றே கடுமையான முகத்தோடும் காணப்படுகின்றனர். இக்கோயில் தாயாரை அகிலாண்டேஸ்வரி என அழைக்கப்படுகிறாள். இக்கோயிலில் உமையாள்நாச்சி என்ற தேவதாசி, அம்மன் சன்னதி ஒன்றை கட்டினாள். அவளுக்கு மலையமங்கை என பெயர் சூட்டினாள். காலப்போக்கில் அது சவுந்தரநாயகி சன்னதியாக மாறியிருக்கக்கூடுமென தெரிகிறது இசைக் கல்வெட்டுமகேந்திரவர்ம பல்லவனுடைய இசைக் கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது. [1] சரிகமபதநி குறித்த குறிப்புகள் இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.[2] குடவரைக்கோவில்மலையினைக் குடைந்து, குடவரைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குடவரை பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. இங்கு ஆயக்கலைகள் 63ஐயும் விளக்கக்கூடிய கற்சிற்பங்கள் இக்கோவிலில் இடம் பெற்றுள்ளது. பங்குனி உத்திர திருவிழாஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தில் தெப்ப உற்சவத் திருவிழா நடைபெறுகிறது. [1] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia