விராலிமலை![]()
மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 2,759 வீடுகள் கொண்ட கணக்கெடுப்பில் உள்ள ஊரான விராலிமலையின் மக்கள் தொகை 10,883 ஆகும். அதில் ஆண்கள் 5,483 மற்றும் 5,400 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 985 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.32% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.72% ஆகவுள்ளது.[4] வரலாறுகுன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆறு கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொடும்பாளூரின் தாக்கம் இங்கும் இருந்திருக்கலாம். சோழர் கால கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் வளமிக்க ஊராக இருந்திருக்க வேண்டும் என சாற்றுகிறது.[5] இங்குள்ள குன்றுப்புறத்தில் முள்ளில்லாத மரங்கள், பெரும்பாலும் வெப்பாலை மரங்கள் காணப்படுகின்றன. விராலிமலை இரு நூற்றாண்டுகளுக்கும் பழமையான குறவஞ்சி நாட்டிய நாடக வடிவொன்றிற்குப் பெயர்பெற்றது. 1993ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி குன்றின் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் இரவு முழுவதும் குறவஞ்சி நாடகம் நடக்கும்.[6] மயில் உய்வகம்![]() இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் கூடுதலாகக் காணப்படும் ஓர் இடமாக விராலிமலை திகழ்கிறது. விராலிமலை முருகன் கோவிலைச் சுற்றியும் சுற்றியுள்ள மலைக் காடுகளிலும் இவை காணப்படுகின்றன. இம்மலைப்பகுதி மயில்களுக்கான உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[7] இந்நகரமும் கோவிலும் மயில்களின் உய்வகமும் பாரம்பரியமிக்க இடமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. [8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia