வரிசை (உயிரியல்)![]() ![]() தற்கால உயிரிய வகைப்பாட்டியல் முறை, ஏழு படிநிலை அலகுகளைக் (taxon) கொண்டுள்ளது. அவற்றுள் வரிசை (ஆங்கிலம்:order, இலத்தீன்: ordo) என்பதும், ஓர் அலகாகும். இதற்கு முன்னால் வகுப்பு என்ற உயிரிய வகைப்பாட்டியல் அலகும், பின்னால் குடும்பம் என்ற உயிரிய வகைப்பாட்டியல் அலகும் அமைந்துள்ளது. இந்த அலகு இலின்னேயசு பின்பற்றிய, ஐந்து படிநிலை அலகுகளிலும் ஒன்றாகும்.
இதற்குரிய பின்னொட்டுகளைத் தாவரவியலிலும்,விலங்கியலிலும் கீழ்கண்டவாறு பயனாகிறது. தாவரங்களுக்குப் பயன்படுத்தப்படும், வரிசைக்குரியப் பின்னொட்டுகள் வருமாறு;-[1][2][3] பெருவரிசைக்கு, (-anae) என்பதனைச் சொல்லிறுதியாகவும், வரிசைக்கு, (-ales) என்பதனைச் சொல்லிறுதியாகவும், (எ.கா) Sapind ales = வேப்ப மரத்தின் வரிசை துணைவரிசைக்கு, (-ineae) என்பதனைச் சொல்லிறுதியாகவும், உள்வரிசைக்கு, (-aria) என்பதனைச் சொல்லிறுதியாகவும் கொண்டு சொற்கள் உருவாக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia