குட்டுவர்குட்டுவர் மரக்கலம் செலுத்தி வாணிகம் செய்து வந்த சேரநாட்டுக் குடிமக்கள். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இத்தகைய கடல் வாணிகத்தில் ஈடுபட்டிருந்தபோது குட்டுவர் கூட்டம் அவனுக்கு இன்னல் விளைவித்தது. இதனால் நெடுஞ்செழியன் ‘பல்குட்டுவர் வெல் கோ’ என்னும் பெருமையினைப் பெற்றுள்ளான். [1] இளஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர வேந்தன் கொங்குநாட்டுக் கருவூரில் இருந்து கொண்டு ஆட்சி புரிந்த போது குட்ட நாட்டில் குட்டுவர் [2] தன்னாட்சி நாட்ட முனைந்தனர். இந்த இரும்பொறை அந்தக் குட்டுவரை அடக்கியதால் ‘குட்டுவர் ஏறு’ எனப் போற்றப்பட்டான். இவ்வாறு பொறையர், குட்டுவர் எனப்பட்ட இருவேறு சேரர் கால்வழியினரிடையே சிறந்து விளங்கியவன் என்பதால் ‘குட்டுவர் ஏறு’ எனப் போற்றப்பட்டான். இதன் பொருள் இவன் குட்டுவரில் அரிமா போன்றவன் என்பதாகும். கொங்கர் ஆடுமாடுகளை மேய்க்கும் போது கட்டுச்சோறு கொண்டு செல்வது போலக் குட்டுவர் மரக்கலங்களில் செல்லும் போது ‘மட்டப் புகா’ கொண்டு செல்வர். [3] குட்டுவர் பலருள் இந்தக் குட்டுவன் ஏறு [4] போன்றவன். சேரன் செங்குட்டுவன் ‘குடக்கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை’ எனப் பாராட்டப்பட்டுள்ளான். [5] இவற்றையும் காண்கஅடிக்குறிப்பு |
Portal di Ensiklopedia Dunia