ஜி. வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இவர் ஆதிக் உடன் பணியாற்றும் மூன்றாவது படம் ஆகும். இதற்கு முன்னர் ஆதிக் உடன் திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி திரைப்படங்களில் பணியாற்றினார். அஜித் குமாருக்கு கிரீடம் படத்திற்கு பிறகு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இரண்டாவது படமாகும். முதலில் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக இருந்தது.[8][9]
"ஓஜி சம்பவம்" என்ற ஒற்றைப் பாடல் 18 மார்ச்சு 2025 அன்று வெளியானது.[10]
தயாரிப்பு
"நம்மில் அனைவருக்குள்ளும் நல்லது, கெட்டது, அசிங்கமானது என மூன்று வகை குணங்கள் உள்ளன. அவை மூன்றும் வெளிவர சமயம் பார்த்துக் காத்திருக்கும். எந்த நேரம், எப்படி வெளிவரும் என்பதுதான் முக்கியம். அதுதான் இந்தப் படம்," என்று இப்படத்தைப்பற்றி இயக்குநர் ஆதிக் கூறினார். "இந்த உலகம் ‘குட்’டாக இருக்கும்போது நாமும் ‘குட்’டாக இருக்கலாம். உலகம் ‘பேட்’ ஆக இருந்தால் நாம் ‘அக்லி’ ஆகத்தான் இருக்க வேண்டியிருக்கும். இதுதான் இப்படத்தின் கதைக்கரு. இதை வைத்துத்தான் கதை பயணமாகிறது" என்றும் தெரிவித்தார்[11]
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவத்தின் முதல் தமிழ்த் திரைப்படமாகும்.[12] இவர்கள் பொதுவாக நிறைய தெலுங்கு மொழி படங்களைத் தயாரிப்பவர்கள். இப்படத்தின் தலைப்பை பரிந்துரை செய்தது அஜித் தான் என்று ஆதிக் தெரிவித்தார்.[13]
இப்படத்தின் தயாரிப்பு செலவு ₹270 கோடி (ஐஅ$32 மில்லியன்) என்றும், அஜித்தின் ஊதியம் ₹165 கோடி (ஐஅ$19 மில்லியன்) என்றும் கூறப்படுகிறது.[1][14]