அர்ஜூன் தாஸ்
அர்ஜுன் தாஸ் (Arjun Das) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர். கைதி படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இவரது மிடுக்கான குரலுக்கு பெயர் பெற்றவர்.[1][2] அர்ஜூன் தாஸ், 2012-இல், பெருமான் என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார். டைம்ஸ் ஆப் இந்தியா இவரை நம்பிக்கை தரும் அறிமுக நடிகர் எனக் குறிப்பிட்டது.[3] அந்தகாரம் படத்தில் நடித்த பின், அர்ஜுன் தாஸ் ரேடியோ ஒன் 94.3 எஃப்எம் உடன் இணைந்து டிரைவ் எனும் வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.[4] ஆக்ஸிஜன் திரைப்படத்தில் (2017) கோபிசந்தின் சகோதரராகவும் நடித்துள்ளார் .[5] கைதி திரைப்படத்தில் முக்கிய எதிராளிக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[6] இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காகப் பரவலாகப் பாராட்டுக்களைப் பெற்றார். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார் .[7][8][9] துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காக குரல் கொடுத்துள்ளார்.[10][11] திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia