குணவீர பண்டிதர்

குணவீர பண்டிதர் 12-ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வாழ்ந்த சமணப் புலவர். சோழ அரசன் திரிபுவனதேவன் என்னும் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்தவர். தொண்டை நாட்டில் களத்தூரில் பிறந்தவர்.

எழுதிய நூல்கள்

நேமிநாதம் என்னும் இவரது தமிழ் இலக்கண நூல்[1] சமண சமயத்தினர் போற்றி வணங்கும் தீர்த்தங்கரர்களில் இருபத்திரெண்டாந் தீர்த்தங்கரரான "நேமிநாத தீர்த்தங்கரர்" என்பவரின் பெயரால் எழுதப்பட்டது. இவர் எழுதிய மற்றொரு நூல் வெண்பாப் பாட்டியல் என்று அழைக்கப்படும் வச்சணந்திமாலை என்னும் பாட்டியல் நூல். வச்சணந்தி முனிவர் இவரது ஆசிரியர். இவர் பெயரால் இந்த நூல் செய்யப்பட்டது.

சிறப்பு

நேமிநாத உரைப் பாயிரத்தில், "வளமலிகளந்தை வச்சணந்தி முனிவரன் கொள்கையின் வழாக் குணவீர பண்டிதன்" என வருவதால் குணவீர பண்டிதருக்கு வச்சணந்தி முனிவர் ஆசிரியராக இருத்தல் வேண்டும் என்பதும், இவர் ஆசிரியரிடம் பேரன்புடையவர் என்பதும் புலப்படுகின்றது.

ஒழுக்கமும் புலமையும்

வெண்பாப் பாட்டியலின் பாயிரவுரையிலே, "கற்றவர் புகழும் களந்தையென் பெரும்பதி- குற்றமில் வாய்மைக் குணவீர பண்டிதன்" என வருவதால் குணவீர பண்டிதருடைய ஒழுக்கச் சிறப்பும் புலமைச் சிறப்பும் விளங்குகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

அடிக்குறிப்பு

  1. எழுத்து, சொல் இலக்கணங்களை மட்டும் கூறும் நூல்

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya