குந்துக்கால் கடற்கரை

குந்துக்கால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் மணி மண்டபம்

குந்துக்கால் கடற்கரை (Kunthukal Beach) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், பாம்பன் தீவில் உள்ள ஒரு கடற்கரையாகும். இது குந்தக்கால் மீனவ கிராமத்துக்கு அருகில் உள்ளது.

அமைவிடம்

குந்துக்கால் கடற்கரையானது இராமேசுவரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், இராமேசுவரம் தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

சிறப்புகள்

இந்த கடற்கரையில் அலைகள் குறைவாக இருப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளிக்க விளையாட பாதுகாப்பான ஒன்றாக கருதப்படுகிறது.[1] சுவேமி விவேகானந்தர் தன் அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை வழியாக 26. சனவரி 1897 அன்று இந்த குந்துகால் கடற்கரையில்தான் வந்திறங்கினார். அதன் நினைவாக இந்தக் கடற்கரையில் விவேகானந்தர் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.[2] தமிழ்நாடு வனத்துறையினால் நடத்தப்படும் சூழலியல் சுற்றுலா திட்டத்தில் குருசடை தீவுக்கு சுற்றுலா பயணிகள் படகில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவ்வாறு அழைத்துச் செல்லும் பயணிகளுக்கான படகு இறங்குதளம் இந்தக் குந்துக்கால் கடற்கரையில்தான் அமைந்துள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. குந்துகால் கடற்கரை
  2. தினத்தந்தி (2021-01-30). "மூடியே கிடக்கும் விவேகானந்தர் மணிமண்டபம்". www.dailythanthi.com. Retrieved 2025-01-24.
  3. Dhanalakshmi (2025-01-21). "ராமேஸ்வரத்தில் இப்படி ஒரு தீவா?...இதுவரை இப்படி ஒரு இடத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க". https://tamil.nativeplanet.com. Retrieved 2025-01-24. {{cite web}}: External link in |website= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya