இராமேசுவரம் தொடருந்து நிலையம்
இராமேசுவரம் தொடருந்து நிலையம் அல்லது இராமேஸ்வரம் தொடருந்து நிலையம் (Rameswaram railway station, நிலையக் குறியீடு:RMM) இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேசுவரம் தீவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் நகரத்திற்கு சேவை செய்யும் தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின் மதுரை தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[1] இந்த நிலையம் மிகவும் புகழ்பெற்ற பம்பன் ரயில் பாலம் வழியாக யாத்ரீக நகரத்தையும் தீவின் மற்ற பகுதிகளையும் பிரதான நிலத்துடன் இணைக்கிறது. இந்த நிலையம் நாட்டின் மிகப் பழமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். சேது அதிவேக விரைவுத் தொடருந்து மற்றும் போட்மெயில் எக்ஸ்பிரஸ் ஆகிய தொடருந்துகள், நூற்றாண்டு காலமாக இங்கிருந்தே சேவையை தொடர்ந்து வருகின்றன. இந்நிலையத்திற்குள் நான்கு நடைமேடைகள், ஏழு தொடருந்து தடங்கள் மற்றும் இரண்டு பிட்லைன்கள் உள்ளன. இங்கிருந்து நாட்டின் பல நகரங்களுக்கு 10-க்கும் மேற்பட்ட தொடருந்து சேவை மக்களின் பயன்பாட்டிற்காக விடப்பட்டுள்ளன. இராமேஸ்வரம் தொடருந்து நிலையத்திலிருந்து மானாமதுரை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருப்பதி, ஐதராபாத் மற்றும் வட இந்தியாவின் வாரணாசி, அயோத்தி, துவாரகை, அஜ்மீர், ஐதராபாத், புவனேஸ்வர் முதலிய நகரங்களுக்கு 15 பயணியர் மற்றும் விரைவுத் தொடருந்துகள் இயக்கப்படுகிறது. திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, இராமேசுவரம் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [7][8][9][10][11][12] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia