குமாரசாமி கவுண்டன் வலசுகுமாரசாமி கவுண்டன் வலசு இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இது அப்பனூத்து பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் ஆகும். இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.பழனி-யில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலும் தாராபுரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மக்கள்2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தோராயமாக ~ 300 மக்கள் வசிக்கின்றனர்.இங்கு ஒரு ஆரம்பப்பள்ளி உள்ளது. அது ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை தமிழ்வழி கல்வி வழங்குகிறது.[1] கோவில்கள்
வேளாண்மைஇவ்வூரின் முக்கிய தொழிலாக வேளாண்மை விளங்குகிறது. முக்கியமாக மக்காசோளம், நிலக்கடலை, பருத்தி ஆகியன பயிரிடப்படுகிறது. மழை மற்றும் நிலத்தடிநீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்களாகும்.
இவையனைத்தும் ஒடடனசத்திரம் காந்தி சந்தை மற்றும் பழனி உழவர் சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இவை தவிர பாசிப்பயறு,உளுந்து , கொள்ளு ,நரிப்பயிர் போன்ற தானியங்களும் பயிரிடப்படுகின்றன. விவசாயம் சார்ந்த ஆடு வளர்ப்பு, மாடுவளர்ப்பு ஆகியவையும் செய்யப்படுகிறது.
பேருந்துகள்
தடம் --> பழனி - தொப்பம்பட்டி - திருவாண்டாபுரம் - அப்பனூத்து - கு.க.வலசு - சாலக்கடை
தடம் --> பழனி - தொப்பம்பட்டி - திருவாண்டாபுரம் - அப்பனூத்து - கு.க.வலசு
தடம் --> பழனி - பூலாம்பட்டி - வாகரை - திருவாண்டாபுரம் - அப்பனூத்து - கு.க.வலசு |
Portal di Ensiklopedia Dunia