குமார் தர்மசேன
குமார் தர்மசேன (Kumar Dharmasena பிறப்பு: ஏப்ரல் 24, 1971, கொழும்பு) முன்னாள் இலங்கைத் துடுப்பாட்டக்காரரும் தற்போது நடுவராக செயலாற்றுபவருமாவார். 1996 உலகக்கிண்ணம் வென்ற இலங்கைத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினராக இருந்தவர்.இவர் ஓர் வலதுகை மட்டையாளரும் வலதுகை புறத்திருப்ப பந்து வீச்சாளருமாவார். தனது பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை 1994ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுடன் துவங்கினார். . இவரது மறைவான பந்துவீசும் பாணி ஒருநாள் துடுப்பாட்டங்களுக்கு ஓர் சிறந்த பந்து வீச்சாளராக விளங்க உதவியது. 1998ஆம் ஆண்டு இவரது பந்து வீசும் விதத்தை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை தடை செய்தபோது தமது மட்டைத் திறமையையும் வெளிக்காட்டினார். சூலை 2000 ஆண்டு இவரது செயல் அனுமதிக்கப்பட்டபின் பல ஒருநாள் துடுப்பாட்டங்களில் பங்கேற்றார். இருப்பினும் தேர்வுத் துடுப்பாட்டமெதிலும் பங்கேற்கவில்லை. 2009ஆம் ஆண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் நடுவராகப் பணியாற்றத் துவங்கினார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நடந்த ஐடிபிஐ வெல்த்சுரன்ஸ் கிண்ணப் போட்டிகளில் செயலாற்றினார். வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia