கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
குயிங் அரச வம்சங்களில் நடைபெற்றிருப்பது போல நகரும் கற்பனைத்திரைக்கதையே இத்திரைப்படமாகும்.லி மு பாய் மற்றும் யு ஷு லியென் இருவரும் தற்காப்புக்கலைகளில் தேற்சிபெற்றவர்கள்.இருவரிடத்தும் காதல் மலர்கின்றது ஆனாலும் இருவரும் தங்கள் தற்காப்புப் பள்ளிகளின் குறிக்கோளுக்கிணைய தங்கள் காதலை பரிமாராமல் இருந்தனர்.அதெ சமயம் பிரபல வாள் ஒன்றைக் களவு செய்யும் ஜென் அதனைத் தன் வசம் கொண்டு சேர்க்கின்றாள். வாளைத் திருடிய திருட்டுக் கும்பல்களைத் தேடுகின்றனர் லி மு பாய் மற்றும் யு ஷீ லியென்.ஜென்னைப் பல முறைகளில் சந்தித்துக் கொள்ளும் லி மு பாய் அவளைக் கொல்ல பல அரிய வாய்ப்புகள் வரும் பொழுதும் கொல்ல மறுக்கின்றார்.பின்னர் நடைபெறும் பல சம்பவங்களில் பாய் காயப்படவே அவரை கண்கானித்துக் கொள்கின்றார் யு ஷு லியென்.இதற்கிடையில் வாளைத் திருடியவளான யென் ஒரு கொள்ளைக்காரனைக் காதல் கொள்கின்றாள்.அவனையே மணம் செய்து கொள்ளவும் விரும்புகின்றாள்.ஆனால் பல காரணங்களினால் அவனை அடையாது இருக்கும் யென் அவனை அடந்தாளா என்பதே திரைக்கதை.
கோல்டன் ஹோர்ஸ் திரைப்பட விழா (தைவான்): சிறந்த திரைப்படம் (அங் லீ), சிறந்த சண்டையமைப்பு(வூ பிங் யுவென்), சிறந்த பதிப்பாளர் (டிம் ஸ்குயெர்ஸ்), சிறந்த ஒலியமைப்பு(Eugene Gearty), சிறந்த தந்திரக் காட்சிகள் (லீயோ லோ மற்றும் ரோப் ஹோட்க்சன்)
கோல்டன் விளம்பர விருது: சிறந்த கலை மற்றும் வியாபாரம் (விளம்பரக்காட்சிகளிற்காக), சிறந்த காதல் (விளம்பரக்காட்சிகளிற்காக)
ஹொங் ஹாங் திரைப்பட விருது: சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகை (பேய்-பேய்-செங்), சிறந்த இயக்குநர் (அங் லீ),சிறந்த ஒளிப்பதிவு (பீட்டர் பௌ)சிறந்த இசை(டன் டான்), சிறந்த பாடல் (கோகோ லீ[பாடகர்]), சிறந்த சண்டைக் காட்சிகள் (வூ பிங் யுவென்), சிறந்த ஒலியமைப்பு (Eugene Gearty)
சிறந்த திரைக்கதை -(ஜேமெஸ் சுமஸ்,க்வி லிங் வாங்,குவோ சங் சாய்)
சிறந்த உடை அலங்காரம்(டிம்மி யிப்)
சிறந்த பதிப்பாளர் (டிம் ஸ்குயெர்ஸ்)
சிறந்த பாடல் (ஜோர்ஜ் கலான்ரெல்லி, டன் டான் [இசையமைப்பு] மற்றும் ஜேமெஸ் சுமஸ் [பாடலாசொரியர்]) - பாடல் "எ.லவ் விபோர் டைம்"
சாட்டேர்ன் விருது சிறந்த நடிகர் (யன் பாட் சோ), சிறந்த நடிகை (மிஷெல் யாவோ),சிறந்த துணை நடிகை (ஷியி சாங்), சிறந்த இயக்குநர் (அங் லீ),சிறந்த எழுத்து -(ஜேமெஸ் சுமஸ்,க்வி லிங் வாங்,குவோ சங் சாய்), சிறந்த இசை(டன் டான் மற்றும் யோ யோ மா), சிறந்த உடையலங்காரம் (டிம்மி யிப்)
அமாண்டா விருது (நோர்வே): சிறந்த வேற்றூ மொழித் திரைப்படம்