குற்றம் புரிந்தால்
குற்றம் புரிந்தால் (Kuttram Purinthal) என்பது 2023 இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை டிஸ்னி இயக்கியிருந்தார். ஆதிக் பாபு, அபிநயா அர்ச்சனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் 2023 பெப்ரவரி 24 அன்று வெளியிடப்பட்டது. நடிகர்கள்
தயாரிப்புபடத்தின் தயாரிப்பு 2018 இன் தொடக்கத்தில் தொடங்கியது.அபிநயா ஒரு காவல் அதிகாரியாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இப்படத்தில் நடிகர் ஆதிக் பாபு அறிமுகமானார்.[2] வரவேற்புஇப்படம் 2023 பெப்ரவரி 24 அன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. தினத்தந்தியின் ஒரு விமர்சகர், படத்தின் திரைக்கதையில் அறிமுகப்படுத்தப்பட்ட திருப்பங்களைப் பாராட்டி படத்திற்கு கலவையான விமர்சனத்தை அளித்தார்.[3] மாலை மலரின் ஒரு விமர்சகர், "சமூகத்தின் தற்போதைய பிரச்சினையை எடுத்துரைத்ததற்காக இயக்குநர் டிஸ்னியைப் பாராட்டலாம்" என்று குறிப்பிட்டார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia