குலசேகர ராசா கதைகுலசேகர ராசா கதை அல்லது பஞ்ச பாண்டியர் கதை அல்லது ஐவர் ராசாக்கள் கதை என்பது தமிழகத்தில் கூறப்படும் தொன்மவியல் பாண்டியர் கதைகளுள் ஒன்று. கதைஇதன்படி சந்திர வம்சத்தை சேர்ந்த குலசேகர பாண்டியன் மற்றும் அவனது 4 தம்பிகள் சேர்ந்து மதுரை மற்றும் தென்பாண்டி சீமை போன்ற பகுதிகளை ஆள்கின்றனர். குலசேகரனின் ஒவியத்தை வரைந்தவர்கள் அதை வடுக நாட்டிற்குக் கொண்டு செல்ல அதைப் பார்த்த வடுக இளவரசி குலசேகரன் மீது காதல் கொள்கிறாள். அவளை திருமணம் முடிக்க அந்நாட்டின் மன்னன் குலசேகர பாண்டியனுக்குத் தூது அனுப்புகிறான். "நான் சந்திர வம்சத்தவரையே" மணப்பேன் என்று மறுமொழி கூற இரு நாட்டுக்கும் போர் மூழ்கிறது. அதில் குலசேகரனின் 4 தம்பிகளையும் கொன்று குலசேகரனை பிணைக்கைதியாக வடுக இளவரசிக்கு மணமுடிக்க வடுக அரசன் முயல்கிறான. பிணைக் கைதியாக இருந்த குலசேகர ராசா நஞ்சுண்டு தற்கொலை செய்து கொள்கிறார். தன்னால் தான் இந்த கதி அவருக்கு நேர்ந்தது என எண்ணி வடுக இளவரசி உடன்கட்டை ஏறுகிறாள். தாக்கம்இக்கதை இன்றும் சமுதாயத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அவை,
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia