குலாம் முகமது சாதிக்
குலாம் முகமது சாதிக் (Ghulam Mohammed Sadiq) ஓர் இந்திய அரசியல்வாதியாவார்.1964 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை சம்மு-காசுமீர் மாநிலத்தின் பிரதமராக பணியாற்றினார்.[1] பின்னர் இந்த பதவி முதலமைச்சராக மறுபெயரிடப்பட்டது. தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு இறக்கும் வரை குலாம் முகமது சாதிக் முதல்வராகப் பதவியைத் தொடர்ந்தார்.[2][3] கல்வி மற்றும் தொழில்லாகூரில் உள்ள இசுலாமியா கல்லூரி மற்றும் அலிகார் முசுலிம் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார்.[4] 1947 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை சேக் அப்துல்லாவின் முதல் அமைச்சரவையில் பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவராக இருந்தார், அதன் பிறகு இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.1964 ஆம் ஆண்டு சம்மு-காசுமீர் மாநிலத்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965 ஆம் ஆண்டு சம்மு காசுமீர் மாநிலத்தின் அரசியலமைப்பு திருத்தப்பட்டபோது அப்போதைய காங்கிரசு அரசாங்கம் குலாம் முகமது சாதிக்கை மாநிலத்தின் முதல் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தது. மேலும் பிரதமரின் பதவியும் முதலமைச்சர் பதவியாக மாற்றப்பட்டது.[5] 1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் நாள் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அலுவலகத்தில் பணியில் இருந்தபோதே சாதிக் காலமானார்.[6] மேற்கோள்கள்
நூற்தொகை
|
Portal di Ensiklopedia Dunia